×
 

அதிரடி திருப்பங்கள்..! "முதலமைச்சர் பதவி"..! ஸ்டாலின் ராஜினாமாவை ஏற்ற ஆளுநர்..!

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக ஸ்டாலின் அனுப்பிய கடிதத்தை பொறுப்பு ஆளுநர் ஏற்றார்.

2026 ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மே 4 அன்று (நேற்று) வெளியானபோது, தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனை ஏற்பட்டது. திமுக சார்பில் முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்கிய மு.க. ஸ்டாலின், தனது கோட்டை என்று கருதப்பட்ட கொளத்தூர் தொகுதியில் தோல்வியைத் தழுவினார். இந்தத் தோல்வி மட்டுமின்றி, திமுகவின் ஒட்டுமொத்த பின்னடைவும் கட்சியை பலவீனப்படுத்தியது. இதைத் தொடர்ந்து, இன்று ஸ்டாலின் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 

கொளத்தூர் தொகுதி ஸ்டாலினுக்கு நீண்டகாலமாக வலுவான கோட்டையாக இருந்து வந்தது. 2008-ல் தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து 2011, 2016, 2021 ஆகிய தேர்தல்களில் அவர் அங்கு தொடர்ச்சியாக வெற்றி பெற்றிருந்தார். குறிப்பாக 2021-ல் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்றிருந்தார்.

ஆனால் 2026-ல் நிலைமை மாறியது. தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வி.எஸ். பாபு, ஸ்டாலினை சுமார் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். பாபு 82,997 வாக்குகளும், ஸ்டாலின் 74,202 வாக்குகளும் பெற்றனர். இது ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கையில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் தோல்வியாக அமைந்தது. இந்த நிலையில் எம்எல்ஏ வாய்ப்பை கூட இழந்த ஸ்டாலின் தனது முதலமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்து இருந்தார்.

இதையும் படிங்க: #BIGBREAKING: பேரதிர்ச்சி..! கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் தோல்வி..! TVK வேட்பாளர் V.S. பாபு அமோக வெற்றி..!!

முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக ஸ்டாலின் அனுப்பிய கடிதத்தை தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் ஏற்றார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததை அடுத்து முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அனுப்பிய கடிதத்தை தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஏற்றுள்ளார். தமிழ்நாட்டில் புதிய முதலமைச்சர் பொறுப்பேற்கும் வரை காபந்து முதலமைச்சர் ஆக ஸ்டாலின் தொடர்வார் எனக் கூறப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: ஒரே நேரத்தில் இப்படியா?... விடிந்ததுமே விஜய்க்கு வந்த நல்ல மற்றும் கெட்ட செய்தி... ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின்...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share