×
 

நீங்கதான் வழி நடத்தணும்..! தொகுதி மறுவரையறை தொடர்பாக ராகுல் காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் முதல் வருஷ ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக உரையாற்றினார்.

நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத் தொடர் ஏப்ரல் 16 ஆம் தேதியான இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு அமர்வு முக்கியமாக தொகுதி மறுவரையறை, மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு ஆகியவற்றை அமல்படுத்துவதற்கான மசோதாக்களை மையமாகக் கொண்டு நடைபெறுகிறது. மத்திய அரசு இந்த மசோதாக்களை விரைவாக நிறைவேற்றி, 2029 பொதுத் தேர்தலில் பெண்கள் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த விரும்புகிறது.மூன்று முக்கிய மசோதாக்கள் இந்த அமர்வில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

தொகுதி மறு வரையறையோடு கூடிய மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு 27 எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். தொகுதி மறு வரையறை மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொகுதி மறுவறையறை மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எதிர்ப்புகளை மீறி இரண்டு மசோதாக்களை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் தாக்கல் செய்தார். அரசியலமைப்பு சட்டம் 131 வது திருத்தம் மசோதா, தொகுதி மறு வரையறை மசோதா ஆகியவற்றை தாக்கல் செய்துள்ளார். தொடர்ந்து யூனியன் பிரதேச சட்ட திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்துள்ளார்.

இதையும் படிங்க: டெல்லிக்கு ஷாக்... சொன்ன படியே அதிரடி காட்டிய ஸ்டாலின்... கருப்பு உடையில் மசோதா நகலை எரித்து மாஸ்...!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். தொகுதி மறு வரையறை மசோதாவிற்கு எதிரான போராட்டத்தை ராகுல் காந்தி வழி நடத்த வேண்டும் என்ற முதல்வர் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. தொகுதி மறு வரையறை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக எம்பிக்கள் செயல்படுவார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: கலைஞர் சிலை டூ கலெக்டர் ஆபீஸ் வரை... கமல், பிரேமலதாவுடன் கைகோர்ந்து நடந்த சி.எம். மு.க.ஸ்டாலின்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share