கலைஞர் சிலை டூ கலெக்டர் ஆபீஸ் வரை... கமல், பிரேமலதாவுடன் கைகோர்ந்து நடந்த சி.எம். மு.க.ஸ்டாலின்...!
தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின், இன்று தர்மபுரி மாவட்டத்தில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.
சேலம் மாவட்டத்தில், மு.க. தலைமையில் நடைபெற்ற நடைபயணம் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த பேரணியில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கமல் ஹாசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின், இன்று தர்மபுரி மாவட்டத்தில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். பின்னர் கார் மூலம் சேலம் மாவட்டத்திற்கு வந்த அவருக்கு, மாவட்ட அளவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சேலம் நான்கு ரோடு அருகிலுள்ள அண்ணா பூங்காவில் இருந்து முதலமைச்சர் நடைபயணம் தொடங்கினார். இந்த நடைபயணத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோரும் இணைந்து நடந்தனர்.
இதையும் படிங்க: அலறும் தமிழ் பெண்கள்..! கொஞ்சம் கூட கூச்சமே இல்லையா..? திமுகவை புரட்டி எடுத்த நயினார்..!
அண்ணா பூங்காவில் தொடங்கிய இந்த பேரணி, பெரியார் மேம்பாலம் வழியாக நகர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்றது. சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்த நடைபயணத்தில், சேலம் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
குறிப்பாக, பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் பெருமளவில் கலந்து கொண்டு உற்சாகத்தை வெளிப்படுத்தினர். இந்த நடைபயணம் நிறைவடைந்ததும், சேலம் கோட்டை மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின், 11 சட்டமன்ற தொகுதிகளின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்ற உள்ளார்.
மேலும், மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளனர். மொத்தத்தில், சேலம் நகரில் நடைபெற்ற இந்த நடைபயணம், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்திற்கு முக்கிய உற்சாகத்தை அளித்துள்ளது.
இதையும் படிங்க: வீட்ல கூட பாதுகாப்பில்ல..! புரையோடும் கஞ்சா...! TTV தினகரன் காட்டம்..!!