இபிஎஸ்க்கு அமித்ஷா கொடுத்த அசைன்மெண்ட்! போட்டு உடைத்த ஸ்டாலின்! கரூர் அரசியல்!
கூட்டணிக்கு யாராவது வருவார்களா என்று ஆட்கள் சேர்க்கும் அசைன்மென்ட் இபிஎஸ்க்கு பாஜ கொடுத்து உள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.737.88 கோடி மதிப்புள்ள பல்வேறு மேம்பாட்டு திட்டங்களை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில், புதிய பேருந்து நிலையம், சாலை விரிவாக்கம், குடிநீர் திட்டங்கள், கல்வி மற்றும் சுகாதார வசதிகள் உள்ளிட்டவை அடங்கும்.
இதோடு, 50,752 பேருக்கு ரூ.4,268 கோடி மதிப்புள்ள சமூக நல உதவிகளையும் அவர் வழங்கினார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ஆனந்தா ராதாகிருஷ்ணன், ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மத்திய பாஜக அரசின் தமிழக எதிர்ப்பை கடுமையாக விமர்சித்தார். "தமிழகம், தமிழர்கள் என்றாலே ஏன் மத்திய அரசுக்கு கசக்கிறது? ஜிஎஸ்டி மூலம் நிதி உரிமை போய்விட்டது. நிதி பகிர்வில் ஏமாற்றம், சிறப்பு திட்டங்கள் எதுவும் அறிவிப்பதில்லை. பள்ளி கல்வி நிதியைத் தர மறுக்கிறார்கள். பிரதமரின் பெயரில் இருக்கும் மத்திய அரசின் திட்டங்களுக்கும் நாமே நிதி அளிக்க வேண்டும்," என அவர் கூறினார்.
இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலின், த்ரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்! மர்ம நபரின் இமெயில்! விசாரணையை துவங்கிய போலீஸ்!
மேலும், "நீட், தேசிய கல்விக் கொள்கை மூலம் கல்வி வளர்ச்சிக்கு தடை. கீழடி அறிக்கைக்கு தடை. தொகுதி மறுவரையறை மூலம் தமிழகத்தை வஞ்சித்தல். தமிழகத்தை 3 முறை பேரிடர் தாக்கியபோது உடனடி நிதி உதவி இல்லை. ஆனால் கரூர் சம்பவத்துக்கு மட்டும் நிதியமைச்சர் உடனே வருகிறார். மணிப்பூர் கலவரம், குஜராத் விபத்துக்கள், கும்பமேளா பலிகளுக்கு விசாரணை இல்லை; கரூருக்கு மட்டும் உடனே அனுப்புகிறார்கள்," என விமர்சித்தார்.
முதல்வர், "அடுத்த வரும் தேர்தலில் அரசியல் ஆதாயம் பார்க்கிறார்கள். யாருடைய ரத்தத்தை உறிஞ்சி உயிர்வாழும் ஒட்டுண்ணி போல பாஜக இருக்கிறது. மாநில உரிமைகளைப் பறித்து, மாநிலமே இருக்கக் கூடாது என நினைக்கிறது. அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்து அடிமை சாசனம் எழுதியுள்ளது.
பாஜகவை ஆதரிக்க கொள்கை அடிப்படை உண்டா? தவறு செய்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களது தவறுகளை போக்கிடும் வாஷிங் மெஷின் போல உள்ளது பாஜக. பழனிச்சாமி, அங்கு உத்தமராகி விடலாம் என குதித்து வருகிறார்," என சாடினார்.
"பழனிசாமியை, கூட்டணிக்கு யாராவது வருவார்களா என்று ஆட்கள் சேர்க்கும் அசைன்மென்ட் கொடுத்து இருக்கிறார்கள். தமிழக மக்கள் நலன் மீது அக்கறை உள்ள யாரும் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டார்கள். ஆதரவு குறைந்த உடன் ஆர்எஸ்எஸ் பாதையில் நடக்கிறது. திமுக ஆட்சிதான் அடுத்த தேர்தலிலும் தொடரும்," என முடிவாகக் கூறினார்.
ராமநாதபுரத்தில் தொடங்கப்பட்ட திட்டங்கள், புதிய பேருந்து நிலையம் (ரூ.20 கோடி), சாலைகள், குடிநீர், கல்வி-சுகாதார வசதிகள் உள்ளிட்டவை. இவை மாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் என அரசு தெரிவித்துள்ளது. நிகழ்ச்சி, திமுகவின் மக்கள் நல ஆட்சியை வலியுறுத்தியது.
இந்த பேச்சு, தமிழக அரசியல் களத்தில் பாஜக-அதிமுகவுக்கு எதிரான புதிய சர்ச்சையைத் தூண்டியுள்ளது. முதல்வரின் வார்த்தைகள், சமூக வலைதளங்களில் பரவி, திமுக ஆதரவாளர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இதையும் படிங்க: டெல்லியில் முகாமிட்டுள்ள ஆதவ்! தவெக-வின் அடுத்த மூவ்? களமிறங்கும் டெல்லி!