நெருங்கும் தேர்தல்.. சூடுபிடிக்கும் களம்..!! காங்கிரஸ் கட்சியின் ஸ்டார் பேச்சாளர்கள் யார் யார் தெரியுமா..??
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. வேட்பாளர்கள் வீதி வீதியாகச் சென்று தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு ஆதரவாக அந்தந்தக் கட்சிகளின் தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தேர்தல் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தும் வகையில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் மொத்தம் 40 முக்கிய பேச்சாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. மத்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களான மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வதரா, கே.சி. வேணுகோபால், பி. சிதம்பரம், சித்தராமையா, ரேவந்த் ரெட்டி, டி.கே. சிவக்குமார், சச்சின் பைலட், சசி தரூர் உள்ளிட்டோர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க: 30 ஆண்டுகால உழைப்பு விற்பனை செய்யப்படுகிறது! காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலுக்கு ஜோதிமணி எம்.பி. கடும் எதிர்ப்பு!
மாநில அளவில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான செல்வப்பெருந்தகை, வி. நாராயணசாமி, ஜி. பரமேஸ்வரா, கார்த்தி சிதம்பரம், எம்.கே. விஷ்ணு பிரசாத், ஜோதிமணி, விஜய் வசந்த், ஆர். சுதா, சசிகாந்த் செந்தில், ராபர்ட் புரூஸ், வி.டி. சதீசன், கே. ஜெயகுமார், திருநாவுக்கரசர், கே.வி. தங்கபாலு, கே.எஸ். அழகிரி, நிவேதிதா அல்வா போன்றோரும் நட்சத்திர பேச்சாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர, முகுல் வாஸ்னிக், ரமேஷ் சென்னித்தலா, சையத் நசீர் ஹுசைன், உத்தம் குமார் ரெட்டி, மாணிக்கம் தாகூர், காஜி முகமது நிசாமுதின், ராஜேஷ் குமார் மல்லு, பாட்டி விக்ரமார்கா, இம்ரான் பிரதாப்கர்ஹி, பி. கோபிநாத், ரோஹித் சவுதரி, உதய் பானு சிப், அல்கா லம்பா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மூத்த தலைவர்களும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் இந்த நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல், திமுக கூட்டணியின் தேர்தல் பிரசாரத்தை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டின் பல்வேறு தொகுதிகளுக்குச் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். தேர்தல் நாளான 23-ம் தேதி வரை இந்தப் பேச்சாளர்கள் வாக்காளர்களைச் சந்தித்து, கூட்டணியின் வெற்றிக்காக தங்களது முழு பலத்தையும் பயன்படுத்துவார்கள் எனக் கூறப்படுகிறது. இந்தப் பட்டியல் வெளியீடு, திமுக கூட்டணியின் பிரசாரத்துக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: "85% வேட்பாளர்கள் இறுதி!" – நாளை வெளியாகிறது தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!