×
 

"85% வேட்பாளர்கள் இறுதி!" – நாளை வெளியாகிறது தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!

தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நாளை காலை வெளியாகும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை இறுதி செய்வதற்கான மத்திய தேர்தல் குழு (CEC) கூட்டம் இன்று டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கலந்துகொண்டு வேட்பாளர் தேர்வை இறுதி செய்தனர்.

கூட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து ராகுல் காந்தி மற்றும் கார்கே ஆகியோர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டனர். இது குறித்துத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி (TNCC) தலைவர் செல்வப்பெருந்தகை அவர்கள் செய்தியாளர்களிடம் உற்சாகமாகப் பேட்டியளித்தார்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளுக்கான 85% வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுவிட்டார்கள். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் மீதமுள்ள 15% பெயர்களும் இறுதி செய்யப்பட்டுவிடும் என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பிரசாரப் பயணம்: திருத்தணியில் ஏப்ரல் 1 முதல் தொடக்கம்!

வேட்பாளர் பட்டியல் இன்று இரவே அல்லது நாளை (ஏப்ரல் 3) காலை அதிகாரப்பூர்வமாக வெளியாகும். இது ஒரே கட்டமாகவோ அல்லது இரண்டு பிரிவுகளாகவோ வெளியிடப்பட வாய்ப்புள்ளது. வேட்புமனுத் தாக்கல் செய்யக் கடைசி நாள் ஏப்ரல் 6 என்பதால், வேட்பாளர்கள் உடனடியாகத் தங்களது பணிகளைத் தொடங்க ஏதுவாக இந்தப் பட்டியல் விரைவில் வெளியிடப்படுகிறது.

தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகளுக்கான அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் நாளை காலை வெளியாகிறது. பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னைக்கு வருகை தருகிறார். இதையொட்டி சென்னையில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை பிரதமர் மோடி சென்னைக்கு வருகை தந்து பிரசாரம் செய்ய உள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே வேட்பாளர்களை அறிவித்துக் களப்பணிகளை முடுக்கிவிடக் காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளது.

இதையும் படிங்க: கோடை வெயிலுக்கு குட்பை! இன்றும் நாளையும் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை! வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share