ரெட் அலர்ட்டால் தீவிர கண்காணிப்பில் கோவை, நீலகிரி.. தயார் நிலையில் பேரிடர் மீட்புப் படை!
நீலகிரி மற்றும் கோவையில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், மாநில பேரிடர் மீட்புப்.படையினர் மேட்டுப்பாளையத்தில் தயார் நிலையில் உள்ளனர்.
நீலகிரி மற்றும் கோவையில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், மாநில பேரிடர் மீட்புப்.படையினர் மேட்டுப்பாளையத்தில் தயார் நிலையில் உள்ளனர்.
கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில், அடுத்த சில நாட்களில் தமிழகத்திலும் தொடங்க உள்ளது. இதனால், கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. மேலும் மத்திய அரபிக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று வருவதால், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மே 25, 26ல் அதிக மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மலைப் பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகளவில் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோவை, நீலகிரியில் பருவமழை பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீட்புப் பணிகளில் ஈடுபடும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர் சென்னையில் இருந்து வந்து கோவையில் முகாமிட்டுள்ளனர்.
அதில், 23 பேர் மேட்டுப்பாளையம் பகுதிக்கு சென்றனர். பவானி ஆற்றில் நீரோட்டம் அதிகரித்துள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்வதற்கான குன்னூர் மற்றும் கோத்தகிரி மலைப்பாதைகளில் மரங்கள் விழுதல், மண் சரிவு போன்ற சம்பவங்கள் ஏற்பட்டால் துரிதமாக செயல்பட மாநில பேரிடர் மீட்புப் படையினர் மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் முகாமிட்டுள்ளனர்.
.
இதையும் படிங்க: கோவைக்கு ரெட் அலர்ட்.. மக்களே முக்கியமான தொடர்பு எண்களை குறிச்சு வச்சுகோங்க.!
இதையும் படிங்க: அடிச்ச எல்லா பந்துமே சிக்ஸ் தான்..!! கிரிக்கெட் விளையாடி அசத்திய எஸ்.பி வேலுமணி..!