சுவர் இடிந்து மாணவன் பலியான சம்பவம்... அப்பவே சொன்னோம்... அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்..!
திருவள்ளூரில் அரசு பள்ளி சுவர் இடிந்து மாணவன் உயிரிழந்த விவகாரம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் கொண்டாரபுரம் பகுதியில் அரசு உயர்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஏராளமான மாணவர்கள் பயின்று வரும் நிலையில், ஒரு சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பள்ளியின் பக்கமாட்டுச் சுவர் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அதே பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வரும் மோகித் என்ற மாணவன் உயிரிழந்து உள்ளார். மதிய உணவு இடைவேளைக்காக நடைமேடைமீது அமர்ந்து மோகித் உணவு அருந்திக்கொண்டு இருந்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக பள்ளியின் பக்கவாட்டு சுவர் சரிந்து விழுந்தது. மோகித்தின் மேலே சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் உடல் நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுவர் இடிந்து விழுந்ததில் உடல் நசுங்கிய நிலையில் துடிதுடித்து மோகித்தின் உயிர் போய் உள்ளது. இதனிடையே, சுவர் இடிந்து விழுந்து மாணவன் பலியான விவகாரம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி விளக்கமளித்தார்.
கட்டிடம் மோசமாக உள்ளதால் அங்கு யாரும் செல்லக்கூடாது என கட்டுமான பொருட்கள் குவிக்கப்பட்டிருந்ததாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். குறிப்பிட்ட பகுதிக்கு யாரும் செல்லக்கூடாது எனக் கூறியும் மாணவன் சென்றபோதுதான் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு நபார்டு வங்கி உதவியுடன் கட்டப்பட்ட பள்ளி கட்டடம்தான் நேற்று இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதாக கூறினார்.
இதையும் படிங்க: சுவர் இடிந்து பலியான மாணவன்... உடலை வாங்க திட்டவட்டமாக மறுக்கும் பெற்றோர்... தோல்வியில் முடிந்த பேச்சு வார்த்தை...!
இழப்பீடாக மாணவன் குடும்பத்திற்கு மூன்று லட்ச ரூபாய் கொடுத்தாலும் போன உயிர் திரும்பி வராது என்றும் மாணவன் குடும்பத்தினர் என்னென்ன கோரிக்கை வைக்கிறார்களோ அதனை முதல்வரிடம் கொண்டு செல்வது தனது கடமை எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். மேலும், பலியான மாணவனின் சகோதரருக்கு கல்வி சார்ந்த உதவிகள் செய்யப்படும் என்றும் அவர்கள் குடும்பத்திற்கு பக்கபலமாக இருப்போம் எனவும் உறுதிப்பட கூறினார்.
இதையும் படிங்க: வெட்கக்கேடு, அவமானம்... விளம்பரம் தேவையா முதல்வரே? பள்ளி மாணவன் உயிரிழப்புக்கு நீதி கேட்ட சீமான்...!