தொடரும் நீட் சோகம்! தேர்வு பயத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி...
மதுராந்தகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் இன்று நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீர் நுழைவு தேர்வு என்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது. இதற்காக மாணவர்கள் ஆயத்தமாகி வரும் நிலையில், 22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர் . தேர்வு எழுதும் மாணவர்களுக்கான சோதனைகள் நடத்தப்பட்டு தேர்வு மையங்களில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவி கயல்விழி நீட் தேர்வுக்காக ஆயத்தமாகி வந்த நிலையில், இன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு.. மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு!
தேர்வு தொடர்பான பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை கைப்பற்றிய மேல்மருவத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கறுப்பு, சிவப்பு வேட்டியைப் பார்த்தாலே சிலருக்கு பயம்.. சரவெடியாக வெடித்த ஆ. ராசா.!!