×
 

கடன் சுமையால் நிகழ்ந்த சோகம்...! மனைவி, மகன்களை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட தொழிலதிபர்...!

சென்னை நீலாங்கரையில் கடன் சுமையால் மனைவி மற்றும் மகன்களை கொன்று விட்டு தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை நீலாங்கரை அருகே மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை கொன்று விட்டு தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடன் தொல்லை காரணமாக இந்த விபரீத முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தகவலறிந்த போலீசார் உடல்களை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை என்பது எதற்கும் தீர்வல்ல என்றாலும் கூட கழுத்தை நெரிக்கும் கடன் சுமை பலரை உயிரை மாய்த்துக் கொள்ளும் எண்ணத்திற்கு ஆளாக்குகிறது.

அப்படி ஒரு சோகம் தான் நீலாங்கரையில் நிகழ்ந்துள்ளது. சென்னை நீலாங்கரை பகுதியை சேர்ந்தவர் சிரஞ்சீவி தாமோதர குப்தா. இவர் எலக்ட்ரிக் பொருட்கள் விற்பனை கடை நடத்தி வந்துள்ளார். சிரஞ்சீவி தாமோதர குப்தாவிற்கு 46 வயதான ரேவதி என்ற மனைவியும், ரித்விக் மற்றும் தித்விக் என்ற மகன்களும் இருந்துள்ளனர்.

இதனிடையே தாமோதரகுப்தா கடன் சுமை காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், மனைவி மற்றும் மகன்கள் முகத்தில் பாலிதீன் கவரால் மூடி இறுக்கிக் கொன்றுள்ளார். தொடர்ந்து தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் தாமோதர குப்தா. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்ததும் நிகழ்வு இடத்திற்கு சென்ற போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: மதுரையில் பேரதிர்ச்சி; துப்பாக்கியால் சுட்டு 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை...! 

தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடன் சுமையால் மனைவி மற்றும் மகன்களை கொன்று விட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. கடன் சுமை அதிகரித்ததன் காரணமாக தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், இதனால் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: “அச்சச்சோ...நெஞ்சே பதறுதே...” - 2 பெண் குழந்தைகளை கிணற்றில் வீசி தாயும் தற்கொலை... ஷாக்கிங் காரணம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share