×
 

கத்திரி ஹீட் "NO PROBLEM"…! இடியும்...மழையும்..! ட்ரிபிள் காம்போ alert!

கத்திரி வெயிலில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. 2026 மார்ச் மாதத்தில் தமிழகத்தில் வெயில் கொளுத்தியது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு அசாதாரண வானிலை நிகழ்வாகப் பதிவாகியுள்ளது. பொதுவாக மார்ச் மாதம் கோடைக்காலத்தின் தொடக்கமாகக் கருதப்பட்டாலும், இந்த ஆண்டு அதன் தொடக்கத்திலிருந்தே வெப்பநிலை இயல்பை விட அதிகமாக உயர்ந்து, மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதித்தது. வட தமிழக மாவட்டங்களில் குறிப்பாக வெயிலின் தாக்கம் உச்சத்தைத் தொட்டது.

மேலும் முழு மாநிலத்திலும் வெப்ப அலை போன்ற நிலைமைகள் நிலவின. இந்திய வானிலை ஆய்வு மையம் முன்பே மார்ச் முதல் மே வரை தமிழகத்தில், குறிப்பாக வட மற்றும் கடலோரப் பகுதிகளில் வெப்ப அலை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனிடையே, தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பை விட குறைவாக பதிவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. சூப்பர் எல் நினோ நிகழ்வால் இயல்புக்கு மாறாக ஆகஸ்ட் வரை வெப்பத்தின் தாக்கம் நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வழக்கமாக ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழை ஒரு வாரத்திற்கு முன்னதாக மே 23 முதல் 25ஆம் தேதிகளில் தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவமழை முன்னதாக தொடங்கினாலும் தமிழகம் கேரளா கர்நாடக மாநிலங்களில் மழை அளவு இயல்பை விட குறைவாகவே பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஜீன்ஸ், லெக்கின்ஸ் போடாதீங்க..! கடும் வெயிலால் அபாயம்..! மருத்துவர்கள் எச்சரிக்கை..!

தமிழ்நாட்டில் சராசரியாக 33 செ.மீ. பெய்த பருவமழை இந்த ஆண்டு குறைவாக பதிவாகும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. கத்திரி வெயில் காலகட்டம் என்று சொல்லக்கூடிய மே நான்கு முதல் 28ஆம் தேதி வரை வெயில் கட்டுக்குள் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டிருக்கிறது. கத்திரி வெயில் காலத்தில் வெப்ப சலனம் காரணமாக இடியுடன் கூடிய மழை தீவிரமடைய வாய்ப்புள்ளதால் வெயில் கட்டுக்குள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: "HEAT STROKE"..! வெப்ப அலை முன்னெச்சரிக்கை..! சுகாதாரத்துறை அறிவுறுத்தல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share