×
 

முன்ஜாமின் தள்ளுபடி..! செந்தில் பாலாஜிக்கு நெருக்கடி... சுப்ரீம்கோட்டில் மேல்முறையீடு..!!

செந்தில் பாலாஜியின் முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் மதுபான கொள்முதல், டெண்டர் ஒதுக்கீடு மற்றும் நிதி பரிவர்த்தனைகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. "பார்ட்டி பண்ட்" என்ற பெயரில் தனியாக பணம் வசூலிக்கப்பட்டதாகவும் முதலமைச்சர் விஜய் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில், டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்னை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று ஒரே நேரத்தில் 41 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு உள்பட ஆறு இடங்களிலும், அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த விசாரணையைத் தொடர்ந்து, டாஸ்மாக் மதுபான கொள்முதல் மற்றும் டெண்டர் நடைமுறைகளில் மோசடி நடந்ததாகக் கூறி, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கைது நடவடிக்கையைத் தவிர்க்கும் நோக்கில் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இதையும் படிங்க: தாக்குவது நியாயமா..? போராடிய மாணவர்கள்... தடியடி நடத்திய போலீஸ்..! சுப்ரீம்கோர்ட் கண்டனம்..!!

இந்த மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் ஆவணங்கள் மற்றும் இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆரம்பகட்ட ஆதாரங்கள் இருப்பதாகவும், அப்படியிருக்கையில் எந்த அடிப்படையில் முன்ஜாமின் கோரப்படுகிறது என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, செந்தில் பாலாஜியின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. செந்தில் பாலாஜியின் முன் ஜாமின் மனு ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில் நாளையே விசாரிப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உறுதி அளித்துள்ளார். 

இதையும் படிங்க: "ஒரு பதில் கூட இல்லை"..! மத்திய அரசை விளாசிய சுப்ரீம் கோர்ட்..! முக்கிய உத்தரவு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share