தமிழகத்தையே உலுக்கிய Dr. சுப்பையா கொலை வழக்கு..! "ஆயுள் தண்டனை தான்"...! சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!
மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
2013ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள பில்ரோத் மருத்துவமனை அருகே நரம்பியல் மருத்துவர் எஸ்.டி. சுப்பையா பட்டப்பகலில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 58 வயதான அவர் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து தன் காரை நோக்கி நடந்துகொண்டிருந்தபோது, மூன்று பேர் கொண்ட கும்பல் அரிவாள் போன்ற ஆயுதங்களால் தாக்கியது.
அவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஒன்பது நாட்கள் போராடிய பின்னர் செப்டம்பர் 23ஆம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிராகக் குற்றவாளிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
தண்டனையை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்து இருக்கிறது. விசாரணை, நீதிமன்ற தீர்ப்பை முறையாக ஆராயாமல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது சரியில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இனி வாரத்துல 2 நாள் இப்படி தானாம்..!! எரிபொருள் சேமிப்பு நடவடிக்கையை கையில் எடுத்த சுப்ரீம் கோர்ட்..!!
மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் உயர்நீதிமன்றம் மிகப்பெரும் தவறு இழைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. குற்றவாளிகளை விடுதலை செய்த ஹைகோர்ட் உத்தரவு எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஏ1 பொன்னுசாமி, ஏ2 மேரி புஷ்பம் ஆகியோரின் வயதை கருதி தண்டனை குறைப்பு குறித்து ஆளுநரிடம் மனு அளிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கொடூரமான உத்தரவு..! பெரிய கருப்பன் தொடர்ந்த வழக்கு..! ஹைகோர்ட் விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை..!