ஆர்ப்பரிக்கும் தண்ணீர்..!! சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு..! சுற்றுலா பயணிகளுக்கு தடை.!
சுருளி அருகில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. பல்வேறு அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிக்கும் உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தண்ணீர் வரத்து நிலவரங்களை அதிகாரிகள் கவனமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்து ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி வனப்பகுதியில் கனமழை, சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் 5 வது நாளாக இன்றும் தடை விதித்து உள்ளனர்.
அருவியில் தண்ணீர் வரத்து சீராகும் வரை அருவியில் குளிப்பதற்கு யாரும் வரவேண்டாம் என வனத்துறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் வனச்சரணலாயத்தில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் சுருளி அருவி அமைந்துள்ளது. இந்த சுருளி அருவிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து அருவியில் குளித்துவிட்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக சுருளி அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரிசி பாறை, ஈத்தக்காடு, தூவானம் அணை, வென்னியாறு மற்றும் சுருளி அருவியின் ஆற்றுப்படுகை பகுதிகளில் வடகிழக்குப் பருவ மழை தீவிரம் அடைந்து கனமழை பெய்ததால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வங்கக்கடலில் நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி! இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!
அருவியில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் 5 வது நாளான இன்றும் தடை விதித்துள்ளனர். மேலும் நீர்வரத்து சீராகும் வரை சுருளி அருவியில் குளிப்பதற்கு யாரும் வர வேண்டாம் என வனத்துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: நவம்பரில் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு!