×
 

வேட்பாளர் பெருமக்களே..! SUVIDHA இணையதளம் மூலம் வேட்பு மனு... தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!!

சுவிதா இணையதளம் மூலம் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை பூர்த்தி செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கும் நிலையில், இன்று முதல் அரசியல் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்யத் தொடங்குகின்றனர். இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15 அன்று அறிவித்த தேர்தல் அட்டவணையின்படி, தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.

மொத்தம் சுமார் 5.67 கோடி வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் பங்கேற்க உள்ளனர். இதில் ஆண்கள் சுமார் 2.77 கோடியும், பெண்கள் சுமார் 2.89 கோடியும் அடங்குவர். முதல் முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 12.51 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 7 ஆம் தேதி நடைபெறும். 

இந்த நிலையில், வேட்பு மனு தாக்கல் செயல்முறை இன்று முதல் தொடங்குவதால் அரசியல் கட்சியினர் வேட்பு மனுத் தாக்கல் செய்ய மும்முரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் வேட்பாளர்களுக்கு மனுத்தாக்கல் செய்ய எளிய வசதியாக இணையதளத்தை பயன்படுத்தலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சுவிதா இணையதளத்தை பயன்படுத்தி வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை பூர்த்தி செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: #BREAKING: விஜய்க்கு போட்டி யார்? பாமக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..!! முழு விவரம்..!!

இதன் மூலம் வீட்டிலிருந்தே அடிப்படை விவரங்களை உள்ளீடு செய்ய முடியும். இந்த வசதியின் முக்கிய நோக்கம் வேட்புமனு தாக்கல் செயல்முறையை டிஜிட்டல் மயமாக்கி, வேட்பாளர்களுக்கு நேரத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்துவதாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரடியாக தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. 

இதையும் படிங்க: திருவிக நகர் தொகுதியில் களமிறங்கும் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்..! இயக்குநர் பா.ரஞ்சித் பேராதரவு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share