டூயட் பாடி அரசியலுக்கு வந்தவரா MGR?... விஜயை சாடிய SV சேகர்...!
டூயட் பாடிவிட்டு என எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வரவில்லை என SV சேகர் கூறியுள்ளார்.
தமிழக அரசியல் களத்தில் புதிய அலை என்னும் நிலையில் நடிகர் தளபதி விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டதிலிருந்து திமுக ஆட்சியையும், அதன் தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. விஜய், தனது திரைப்பட வாழ்க்கையிலிருந்து அரசியலுக்கு இடைவிடை செய்தாலும், அவரது பேச்சுகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் ஸ்டாலின் ஆட்சியின் பல துறைகளை இலக்காகக் கொண்டு தாக்கி வருகிறார்.
இந்த விமர்சனங்கள், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தளத்தில் TVK-ஐ முதன்மை எதிர்க்கட்சியாக உயர்த்தும் நோக்கத்துடன் நடைபெறுகின்றன. எம். ஜி.ஆர். மற்றும் பேரறிஞர் அண்ணாவை முன்னிறுத்தி தனது பயணத்தை விஜய் தொடர்கிறார். இது பெரும் விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கிறது.
விஜயை நடிகர் SV சேகர் கடுமையாக விமர்சித்து உள்ளார். கோடம்பாக்கத்திலிருந்து நேரடியாக கோட்டைக்கு வந்தவர் இல்லை எம்.ஜி.ஆர் என்று கூறினார். திமுக-வின் வளர்ச்சிக்காக 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து, பின் சிறு பிரச்னையால் தனிக்கட்சி ஆரம்பித்தவர் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: மீண்டும் தலைத்தூக்கும் கொடி பிரச்சனை… சிக்கலில் தவெக… விஜய் பதிலளிக்க கோர்ட் உத்தரவு…!
சினிமாவில் டூயட் பாடிவிட்டு, நேரடியாக எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்தார் என விஜய் நினைத்தால், விஜய்க்கு அரசியல் தெரியவில்லை என்றுதான் சொல்லவேண்டும் என தெரிவித்தார். மனப்பாடம் செய்து பேசுவது, Uncle என்றெல்லாம் பேசுவது கைத்தட்டலுக்கு மட்டுமே உதவும் என்றும் வாக்காக மாறாது எனவும் நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கூட்டம் வந்துட்டா ஜெயிச்சுட்டதா அர்த்தமா?... விஜயை கலாய்த்த ஆர். எஸ். பாரதி...!