கூட்டம் வந்துட்டா ஜெயிச்சுட்டதா அர்த்தமா?... விஜயை கலாய்த்த ஆர். எஸ். பாரதி...!
கூட்டத்தைக் கூட்டி விட்டதால் விஜய் ஜெயித்து விட்டார் என்று அர்த்தமா என ஆர்.எஸ் பாரதி கேள்வி எழுப்பினார்.
புதுவை கதிர்காமம் தொகுதி திமுக சார்பில் கலைஞர் சிலை, நுாலகம், தொகுதி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கலந்துக் கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் திமுகவுக்கு நாங்கள் தான் போட்டி என அதிமுக - தவெக போன்ற கட்சிகள் இருப்பதாக கூறுவதாகவும் தற்போதைய சூழலில் திமுக வலுவாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
2019 ஆம் ஆண்டில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி தங்கள் கூட்டணியில் இருந்து பல கட்சிகள் வெளியேறும் என்று சொல்லிக் கொண்டு இருப்பதாகவும் ஆனால் தற்போது அவரது கட்சியிலிருந்து பாதி பேர் வெளியேறி விட்டதாகவும் விமர்சித்தார். முதலில் எடப்பாடி பழனிச்சாமி அவரது நிலைமையை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றார்.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவரது சுற்றுப்பயணத்தை காண ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். விஜய் அரசியலில் புதிய அலையாக இருப்பார் என்றும் சிலர் கூறுகின்றனர். இந்த நிலையில், விஜய் செல்லும் இடமெல்லாம் அதிக கூட்டம் கூடுவதை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய போது, பெரிய பெரிய ஜாம்பவான்களை எல்லாம் சந்தித்த கட்சி திமுக என்றும் தயவு செய்து விஜய் பற்றி எல்லாம் கேள்வி கேட்காதீர்கள் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இதோ வந்துட்டாங்க-ல! கரூரில் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி அளிப்பதில் சிக்கல்…!
கூட்டத்தை கூட்டிவிட்டார் என்பதற்காக ஒருவர் அரசியலில் நிலைத்து விட முடியாது என்றும் அரசியலில் தடம் தெரியாமல் போனதற்கு பலபேர் எடுத்துக்காட்டாக இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: டிசைன் டிசைனா யோசிக்கிறாங்கயா… விஜய் CM ஆக வேண்டும் எனக் கூறி சென்னை வரை பாதயாத்திரை வந்த ரசிகர்…!