×
 

சொன்னா கேக்க மாட்டீங்களா? நெருங்கும் தீபம்... ஆக்கிரமிப்புகளை அகற்றி அதிரடி காட்டிய ஆட்சியர்...!

திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

தமிழ்நாட்டின் ஆன்மிக மையமாகத் திகழும் திருவண்ணாமலை, ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் ஒரு அற்புதமான ஒளி விழாவை அணிவகுத்து நிற்கிறது. கார்த்திகை தீபம் என்று அழைக்கப்படும் இந்தத் திருவிழா, லட்சக்கணக்கான பக்தர்களைத் தன்னோடு இணைத்து, இருளைக் கடந்து ஒளியின் பெருமையைப் பாடுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபம் என்றாலே மெய்சிலிர்க்கும். தீபத் திருவிழாவின் போது மலை உச்சியில் தீபம் ஏற்றும்போது அண்ணாமலையாருக்கு அரோகரா., உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா என்ற கோஷங்கள் பின்னை பிளக்கும்.

கார்த்திகை தீபத்தின் வரலாறு, புராணங்களின் ஆழமான கதைகளுடன் பின்னிப்பிணைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக நடைபெறும். தமிழ் பஞ்சாங்கத்தின்படி, கார்த்திகை மாத பௌர்ணமியன்று, கிருத்திகா நட்சத்திரத்துடன் இணைந்து நிகழும் இந்த விழா, பத்து நாட்கள் நீடிக்கும் பிரஹ்மோத்சவமாகக் கொண்டாடப்படுகிறது. 

இந்த ஆண்டு தீபத் திருவிழா கொண்டாட்டமாக டிசம்பர் 3 அன்று, மாலை 6:30 மணியளவில், திருவண்ணாமலையின் 2668 அடி உச்சியில் 30 அடி உயரமுள்ள பெரிய கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. திருவண்ணாமலை தீபத் திருவிழாவை காண 40 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: அண்ணாமலையாருக்கு அரோகரா... திருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றம்... முக்கிய அப்டேட்..!

 திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் டிசம்பர் 3ம் தேதி நடக்க உள்ள திருக்கார்த்திகை திருவிழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மாட வீதியில் நடைபாதை மற்றும் சாலையோரம் ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கடைகள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அகற்றப்பட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்றி விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த பொருட்களை பறிமுதல் செய்து மாநகராட்சி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: அண்ணாமலையார் தீபத்திருவிழா… SAFETY FIRST… டிஜிபி விரிவான ஆய்வு…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share