×
 

“முத்தரையர் மறுவாழ்வு திட்டம் வேண்டும்!” - முதலமைச்சரிடம் தமிழர் தேசம் கட்சி தலைவர் கோரிக்கை

“வலையர் புனரமைப்பு வாரியத்தைத் திருத்தி அமைக்கக் கோரிக்கை” - முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்த செல்வகுமார்

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திருச்சியில் பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் நிலையில், அவரைத் தமிழர் தேசம் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வகுமார் நேரில் சந்தித்து மிக முக்கியமான கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டு, இதுவரை செயல்படுத்தப்படாமல் முடங்கிக் கிடக்கும் வலையர் புனரமைப்பு வாரியத்தை உடனடியாகத் திருத்தி அமைக்க வேண்டும். அந்த வாரியத்தின் பெயரை முத்தரையர் மறுவாழ்வு திட்டம் என மாற்றி அறிவித்து, அந்தச் சமூக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நலத்திட்டங்கள் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கவும், பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள குடும்பங்களுக்குச் சிறப்பு நிதியுதவிகளை வழங்கவும் செல்வகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சியில் முத்தரையர் சமூகத்தினர் கணிசமான வாக்கு வங்கியை வைத்துள்ளச் சூழலில், 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு முதலமைச்சரைச் சந்தித்து இத்தகையக் கோரிக்கையை முன்வைத்துள்ளது அரசியல் வட்டாரங்களில் கவனத்தைப் பெற்றுள்ளது. கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட முதலமைச்சர், இது குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாகத் தமிழர் தேசம் கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "மகாராஷ்டிராவிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு!" - அஜித் பவார் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!

முன்னதாக, திருச்சியில் நடைபெற்ற திமுக நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற முதலமைச்சர், திருச்சி எப்போதும் திராவிட இயக்கத்தின் திருப்புமுனை பூமி என பேசியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடரும்; ஸ்டாலினே மீண்டும் முதலமைச்சர்! - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முழக்கம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share