கண்டிக்கிறோம்..! வஞ்சிக்கும் பாஜக... வரும் 18 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்... தமிழ்நாடு காங்கிரஸ் அறிவிப்பு...!
100 நாள் வேலை திட்டத்தில் காந்தியின் பெயரை நீக்குவதை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மன்மோகன்சிங் தலைமையில் 2004 ஆம் ஆண்டு அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிற வகையில் கிராமப்புற மக்களிடையே நிலவுகிற வேலையில்லா திண்டாட்டத்தை போக்கும் வகையில் வறுமையை ஒழிக்கின்ற நோக்கத்தில் 2006 ஆம் ஆண்டில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது. அதன் பிறகு அக்டோபர் 2009 முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் என்று பெயரிடப்பட்டது என்றும் கிராமப்புற மக்களின் முன்னேற்றத்திற்காக தமது வாழ்நாளில் பெரும் பகுதியை தியாகம் செய்த மகாத்மா காந்தியடிகளின் பெயரை அத்திட்டத்திற்கு சூட்டுவது பொருத்தமாக அமைந்தது எனவும் கூறியுள்ளது.
கிராமப்புற மக்களின் குறைந்தபட்ச ஊதிய பாதுகாப்பு திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் என்கிற பெயரை பூஜ்ய பாபு கிராமின் ரோஜ்கர் யோஜனா என்று பெயர் மாற்றம் செய்திட மக்களவை கூட்டத் தொடரில் மத்திய பா.ஜ.க. அரசு மசோதாவை தாக்கல் செய்திருக்கிறது என்றும் இதிலிருந்து மகாத்மா காந்தியின் மீது பா.ஜ.க. வைத்திருக்கும் வன்மம் வெளிப்படுகிறது எனவும் கூறியது.
எனவே, 100 நாள் வேலை திட்டத்திலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவதை வன்மையாக கண்டிக்கும் வகையில் எனது தலைமையில், சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களின் முன்னிலையில் நாளை மறுதினம் (18.12.2025) வியாழக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் சென்னை அண்ணா சாலை தலைமை தபால் நிலைய அலுவலகம் முன்பு பா.ஜ.க. அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: கரெக்டு தான்..! தவெக போராட்டம் வரவேற்கத்தக்கது… கிரீன் சிக்னல் காட்டிய செல்வப் பெருந்தகை…!
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தியா கூட்டணி தலைவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் என திரளானோர் கலந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
இதையும் படிங்க: பூதாகரமாக வெடித்த 100 நாள் வேலை பெயர் மாற்றம்... நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்...!