×
 

கரெக்டு தான்..! தவெக போராட்டம் வரவேற்கத்தக்கது… கிரீன் சிக்னல் காட்டிய செல்வப் பெருந்தகை…!

தமிழக வெற்றி கழகத்தின் எஸ் ஐ ஆர் எதிர்ப்பு போராட்டத்தை செல்வப் பெருந்தகை ஆதரித்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெறும் சிறப்பு வாக்காளர் திருத்த பணிகள் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்தன. இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஏற்கனவே திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த நிலையில் இன்று தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் எஸ்ஐஆர் எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் எஸ் ஐ ஆர் பணிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதற்கு முன்னதாக வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் வாக்காளர் திருத்தப் பணிகளில் குளறுபடிகள் இருப்பதாகவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளில் படிவத்திலேயே குழப்பம் இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் இன்று முன்னெடுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருவதை வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அவசரகதியில் SIR… சந்தேகம்..! தவெக அருண் ராஜ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு…!

சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, S.I.R.-ஐ எதிர்த்து தவெக போராட்டம் நடத்துவது வரவேற்கத்தக்கது என்று கூறினார். ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து எஸ்ஐஆர்க்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். இதனை காங்கிரஸ் வரவேற்கிறது என்று கூறினார். 

இதையும் படிங்க: தமிழகத்தில் SIR… தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்... ஸ்தம்பித்த சென்னை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share