1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு அட்டவணை வெளியீடு! ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!
தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு தேதிகளைப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு மற்றும் கோடை விடுமுறை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தொடக்கக்கல்வி இயக்குனர், தனியார் பள்ளிகள் இயக்குனர் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குனர் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தேர்வுகள் பின்வருமாறு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 முதல் 5-ஆம் வகுப்பு வரை: ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 16-ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும்.6 முதல் 9-ஆம் வகுப்பு வரை: ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 16-ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும். தேர்வுகள் அனைத்தும் ஏப்ரல் 16-ஆம் தேதியுடன் நிறைவடைகின்றன. இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 17-ஆம் தேதி முதல் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குக் கோடை விடுமுறை தொடங்குகிறது.
இதையும் படிங்க: அதிமுகவில் உச்சத்தில் கோஷ்டி பூசல்... கட்சி மாற தயாராகும் மாஜி எம்.எல்.ஏ... இ.பி.எஸுக்கு தலைவலி..!
அனைத்துப் பள்ளிகளும் இந்தத் தேர்வு அட்டவணையை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும், மாணவர்களுக்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் அந்தச் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ஏற்கனவே திட்டமிட்டபடி நடைபெற்று வரும் சூழலில், தற்போது ஆரம்ப மற்றும் நடுநிலை வகுப்புகளுக்கான கால அட்டவணை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தேர்தல் வேட்டையில் சிக்கிய பிரபல நகைக்கடை... ரூ.65 கோடி மதிப்புள்ள 46 கிலோ நகைகள் பறிமுதல்... !!