×
 

ஆர்.எஸ்.எஸ் தொண்டர்; பாஜக விசுவாசி... பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரின் பரபரப்பு பிண்ணணி...!!

கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழக ஆளுநர் பொறுப்பை கூடுதலாகக் கவனிப்பார் என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்குவங்க ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அப்படியானால் தமிழ்நாட்டிற்காக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் யார் என்பது குறித்து பார்க்கலாம்... 

மேற்கு வங்க ஆளுநர் ராஜினாமா:

மேற்குவங்க மாநிலத்தினுடைய ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பதிலாகத் தமிழக ஆளுநராகப் பணியாற்றி வந்த ஆர்.என். ரவி மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அதிரடி மாற்றங்கள் குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: கடன் வாங்கித் தராத நபர் காரில் கடத்தல்... 2 நாட்களாக அடைத்து வைத்து சித்ரவதை... 5 பேரை கொத்தாக தூக்கிய போலீஸ்...!

தனது சோசியல் மீடியா பதிவில், மேற்குவங்க மாநிலத்தின் ஆளுநர் ஆனந்த் போஸ் உடைய ராஜினாமா என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, அரசியல் ஆதாயங்களுக்காக மத்திய உள்துறை அமைச்சர் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே இந்த ராஜினாமா நடந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி, மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தனக்குத் தகவல் கிடைத்துள்ளதாக மம்தா தெரிவித்தார். மாநில ஆளுநரை நியமிக்கும்போது வழக்கமாக மாநில முதல்வருடன் கலந்தாலோசிக்கும் மரபு இந்த முறை பின்பற்றப்படவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது கூட்டாட்சித் தத்துவத்திற்கும், ஜனநாயக மாண்புகளுக்கும் எதிரானது என்று அவர் சாடியுள்ளார்.

மேற்கு வங்கத்திலும், தமிழ்நாட்டிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள இந்த சமயத்தில் ஆளுநர்கள் மாற்றப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி மாற்றப்பட்ட நிலையில், கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழக ஆளுநர் பொறுப்பை கூடுதலாகக் கவனிப்பார் என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். 

ஆர்.என்.ரவி. மாற்றம்:

ஆர்.என் ரவி 2021-ஆம் ஆண்டு தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் தமிழக ஆளுநராக இருந்த காலகட்டத்தில் அவருக்கும் தமிழக அரசுக்கு இடையே பதற்றமான உறவுகள் நிலவியது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் ஆர்.என் ரவி நிலுவையில் வைத்திருந்தது சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அவ்வாறான 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியது தேசிய அளவில் விவாதமானது. தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என்பதே பொருத்தமானது என கூறியது, திருவள்ளுவர் உருவப்படத்திற்உ அவ்வப்போது காவி உடை, பூணூல் அணிவிப்பது, சட்டப்பேரவையில் இருந்து வெளியேறுவது என ஆளுநர் ஆர்.என்.ரவி மீதான சர்ச்சைகள் ஏராளம். 

2023 ஆம் ஆண்டில் சட்டப்பேரவையில் வாசிப்பதற்காக அரசு தயாரித்த உரையில் இருந்த மகளிர் முன்னேற்றம், மதச்சார்பின்மை, சுயமரியாதை, பெரியார், அம்பேத்கர், கலைஞர் ஆகியவற்றை உச்சரிக்க மறுத்தார். அரசு கொடுத்த உரையில் இருப்பதுதான் அவையில் நிறைவேறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி தந்தார். இதனால் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார் ஆளுநர் ரவி. இதேபோன்று 2024, 25, 26 ஆம் ஆண்டுகளில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்கிற காரணத்தை எழுப்பி, பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். தமிழ்நாடு அரசோடு தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து 2022ம் ஆண்டு குடியரசுத் தலைவரிடம் திமுக மனு அளித்ததோடு அவரை திரும்ப பெறவும் கோரியது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளுநர் மாற்றப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழக ஆளுநர் பொறுப்பை கூடுதலாகக் கவனிப்பார் என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். 

யார் இந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்? 

ஆர்லேகர் தனது சிறுவயதிலிருந்தே ஆர்எஸ்எஸ் இயக்கத்துடன் தொடர்புடையவர் . 1989 ஆம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். 1980 களில் இருந்து கோவா பாஜகவின் தீவிர உறுப்பினராக இருந்து வருகிறார். கோவா பிரதேச பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர், கோவா தொழில்துறை மேம்பாட்டுக் கழகத் தலைவர், கோவா மாநில எஸ்சி மற்றும் ஓபிசி நிதி மேம்பாட்டுக் கழகத் தலைவர், கோவா பாஜக பொதுச் செயலாளர், தெற்கு கோவா பாஜக தலைவர் என பாஜகவில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.  

2014 ஆம் ஆண்டு மனோகர் பாரிக்கர் மத்திய பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டபோது , ​​அடுத்த முதலமைச்சராக அர்லேக்கர் பரிசீலிக்கப்பட்டார், ஆனால் கட்சி அதற்கு பதிலாக லட்சுமிகாந்த் பர்சேகரை அடுத்த முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்தது. கோவா சட்டமன்றத்தை காகிதமில்லாமாக்கிய முதல் மாநில சட்டமன்றமாக மாற்றிய பெருமை அவருக்கு உண்டு. 2015 ஆம் ஆண்டு அமைச்சரவை மறுசீரமைப்பின் போது சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

ஜூலை 6, 2021 பண்டாரு தத்தாத்ரேயா ஹரியானா ஆளுநராக நியமிக்கப்பட்டபோது, ​​இவர் இமாச்சலப் பிரதேசத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார் . பின்னர்  பீகாரின் 29வது ஆளுநராக நியமிக்கப்பட்டார், டிசம்பர் 24, 2024 அன்று கேரளாவின் 23வது ஆளுநராக நியமிக்கப்பட்டார் . கோவா சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகராகவும் இருந்துள்ளார். 
 

இதையும் படிங்க: அசாமில் பரபரப்பு! மாயமான இந்திய விமானப்படையின் 'சுகோய்-30' போர் விமானம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share