×
 

தமிழகத்தில் 2 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! அரசு முதன்மை செயலாளர் உத்தரவு!

இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக நிர்வாகத்தில் இரண்டு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளராகப் பணியாற்றி வந்த டாக்டர் பி.சங்கர் தொல்லியல் துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். இதற்கிடையே, சமூக நீதித்துறை செயலாளராகப் பொறுப்பு வகித்து வரும் டாக்டர் என்.சுப்பையன், கூடுதலாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளராகப் பொறுப்பு வகிப்பார் என்று தலைமைச் செயலாளர் எம்.சாய்குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை (சிறப்பு-ஏ) வெளியிட்டுள்ள அரசாணை எண் 3242-ன் படி, தமிழ்நாடு வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி வந்த டாக்டர் பி.சங்கர் ஐஏஎஸ் மாற்றப்பட்டு, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை இப்பதவியைக் கூடுதல் பொறுப்பாகக் கவனித்து வந்த டாக்டர் வி.பி.ஜெயசீலன் ஐஏஎஸ்-க்கு பதிலாக இவர் இப்புதிய பொறுப்பினை ஏற்கிறார்.

அரசாணை எண் 3243-ன் படி, சமூக நீதித்துறை செயலாளராகப் பணியாற்றி வரும் டாக்டர் என்.சுப்பையன் ஐஏஎஸ்-க்கு, வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை அரசுச் செயலாளர் பொறுப்பு முழு கூடுதல் பொறுப்பாக (Full Additional Charge) வழங்கப்பட்டுள்ளது. டாக்டர் பி.சங்கர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து உடனடியாக இப்பொறுப்பினை ஏற்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை கண்டறிய இலவச டிஎன்ஏ பரிசோதனை! தமிழக அரசு ஏற்பாடு!

இதையும் படிங்க: கோயில் செல்போன் தடையை திரும்ப பெறுக! தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share