×
 

தனியார் வசமாகிறது பத்திரப் பதிவுத்துறை?!! மகாராஷ்டிராவை ஃபலோ செய்யும் தமிழ்நாடு?!

பாஸ்போர்ட் அலுவலகங்கள் போன்று, தனியார் மையங்கள் வாயிலாக பத்திரப்பதிவு மேற்கொள்ள அனுமதிப்பதற்கான வழிமுறைகளை, பதிவுத் துறை உருவாக்கி வருகிறது.

தமிழகத்தில் பத்திரப்பதிவு சேவையை எளிமைப்படுத்தும் நோக்கில் புதிய மாற்றங்கள் விரைவில் அமலுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு (Tamil Nadu) முழுவதும் தற்போது 589 சார்-பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், அலுவலகங்களில் நேரில் சென்று, அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை நாடியே பணிகளை முடிக்க வேண்டிய நிலை பொதுமக்களுக்கு சிரமமாக இருந்து வந்தது.

இந்த சிக்கலை தீர்க்கும் வகையில், பதிவுத் துறை புதிய டிஜிட்டல் முறைகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அதில் முக்கியமாக ‘ஸ்டார் 3.0’ என்ற மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தால், மக்கள் எங்கிருந்தும் இணையதளம் மூலம் பத்திரப்பதிவு செய்யும் வசதி கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனுடன் சேர்த்து, பாஸ்போர்ட் அலுவலகங்கள் போன்று தனியார் மையங்கள் வாயிலாகவும் பத்திரப்பதிவு செய்ய அனுமதிக்கும் திட்டம் ஆய்வில் உள்ளது. மகாராஷ்டிரா (Maharashtra) மாநிலத்தில் இந்த முறை ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு ஜூலை மாதம் முதல் 60 தனியார் மையங்கள் மூலம் பத்திரப்பதிவு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த மையங்களில் அரசின் சார்பில் ஒரு சார்-பதிவாளர் மற்றும் ஒரு எழுத்தர் மட்டும் இருப்பார். மற்ற பணிகளை தனியார் ஊழியர்கள் மேற்கொள்வார்கள்.

இதையும் படிங்க: சட்டமன்றத் தேர்தல்..! ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பதட்டமான வாக்குச்சாவடிகள்..! தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்..!

இந்த சேவைக்கு ஒரு குறிப்பிட்ட தொகை கட்டணமாக வசூலிக்கப்படும். பாஸ்போர்ட் சேவை மையங்கள் போலவே, இங்கு மக்கள் நேரம் முன்பதிவு செய்து விரைவாக பணிகளை முடிக்க முடியும். இந்த முறை பொதுமக்களின் நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, அலுவலக நெரிசலையும் குறைக்கும் என்று கூறப்படுகிறது.

தமிழகத்திலும் இதே முறை கொண்டு வருவதற்கான வழிமுறைகளை பதிவுத் துறை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். தேர்தல் நடைமுறைகள் முடிந்ததும், இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டம் அமலுக்கு வந்தால், பத்திரப்பதிவு செயல்முறை விரைவாகவும் வெளிப்படையாகவும் மாறும். அதே நேரத்தில், சேவை கட்டணம் மற்றும் தனியார் பங்கேற்பு தொடர்பான சவால்களையும் அரசு கவனமாக கையாள வேண்டிய அவசியம் உள்ளது என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: வாக்களிக்க செல்லும் மக்களுக்காக 11,323 சிறப்பு பேருந்துகள்! போக்குவரத்து துறை சிறப்பு ஏற்பாடு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share