×
 

மாரியால் வாடும் போது மாரியை பாராட்டுவது முக்கியமா? முதல்வரை பந்தாடிய தமிழிசை…!

மாரியால் மக்கள் வாடும் போது மாரியை பாராட்டுவது தேவையா என தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

பைசன் படத்தை பார்த்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜை நேரில் பாராட்டினார். அந்த படம் குறித்து தனது விமர்சனங்களையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துயிருந்தார். முதலமைச்சர் பைசன் படம் பார்த்து மாரி செல்வராஜை பாராட்டி இருப்பது விமர்சனங்களுக்கு உள்ளானது. விவசாயிகளை கண்டுகொள்ள நேரமில்லை ஆனால் பாய்சன் படம் பார்ப்பதற்கு மட்டும் முதலமைச்சருக்கு நேரம் இருக்கிறதா என எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி இருந்தார்.

இதனிடையே, தமிழகம் முழுவதும் தரையில் மழை என்னும் மாரியால் பாதிக்கப்பட்டு செய்வதறியாது கைகளை பிசைந்து கொண்டிருக்கும் பொழுது முதலமைச்சர் ஸ்டாலின் திரையில் பார்த்ததை இயக்குனர் மாரியின் கைகளைப் பற்றிக் கொண்டு வாழ்த்தி இருக்கிறார் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்தார்.

My son- ஐ துணை முதல்வர் ஆக்கிவிட்டேன் இனிமேல் விவசாயிகளின் son களை பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் பைசன் பார்த்தால் போதும் என முதல்வர் ஸ்டாலின் மகிழ்ந்து கொண்டிருப்பதாகவும் சாடியுள்ளார்.

இதையும் படிங்க: விஜயுடன் கூட்டணியா? என்ன செய்ய போறீங்க? நயினார் நாகேந்திரன் சூசகம்...!

விளையாட்டு ஊக்கப்படுத்தப்பட வேண்டியதுதான்., ஆனால் பொது மக்களின் வாழ்க்கையை விளையாட்டாக முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று தெரிவித்தார். மக்கள் மாரியில் நனைந்து இயங்க முடியாமல் இருக்கும் பொழுது இயக்குனர் மாரியை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை என்றும் கூறியுள்ளார். இது மழை காலம் பிழைக்க முடியுமா என மக்கள்தவித்துக் கொண்டிருக்கிற நேரத்தில் பிழை செய்து கொண்டிருக்கிறீர்கள் முதல்வர் அவர்களே என்றும் 2026 இதற்கெல்லாம் பதில் சொல்லும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: “வெள்ளை சட்டை, ஸ்மார்ட் வாட்ச்” ... மண்டை மேல் இருக்கும் கொண்டையை மறந்த அண்ணாமலை... கலாய்க்கும் நெட்டிசன்கள்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share