×
 

தாமரை மலரதான் போகிறது... அவ்ளோ தான்...! அமைச்சர் சேகர்பாபுவுக்கு தமிழிசை பதிலடி...!

என்ன நடந்தாலும் தமிழகத்தில் தாமரை மலர தான் போகிறது என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

எப்படியாவது தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் தாமரை மலராது என்று எதிர் கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில் கோவில் குருக்கள் ஒருவர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அம்மன் கையில் இருப்பதும் தாமரை தான் என்றும் அனைவரதும் மனதிலும் தாமரை மலர வேண்டும் என்றும் பேசி உள்ளார். இந்த வீடியோக்களை பகிர்ந்த இடதுசாரிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

நாகையில் உள்ள சிக்கல் சிங்காரவேலர் கோயிலில் அர்ச்சகர், தாமரை அனைவரது உள்ளத்திலும் மலர வேண்டும் என்ற கூறியது குறித்து அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தார். திருக்கோயில் அர்ச்சகர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று கூறினார். கோயிலுக்கு வரும் பக்தர்கள் மனம் குளிரும் வகையில் பக்தர்கள் நலனை நாடி அர்ச்சனை செய்ய வேண்டுமே தவிர, அரசியல் சாயத்தை பூசிக்கொள்ளக் கூடாது என்று தெரிவித்தார்.

அப்படி இருந்தால் அந்த அர்ச்சகர் கூறிய சின்னத்தை ஆதரிப்பவர்கள் தவிர்த்து, மற்றவர்கள் அவரை எப்படி குருக்களாக ஏற்றுக் கொள்வார்கள் என்றும் அந்த அர்ச்சகர் கூறியது குறித்து புகார் வந்துள்ளது எனவும் தெரிவித்தார். தேவைப்பட்டால் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்து இருந்தார்.  நடவடிக்கை எடுக்கப்படும் என்ற சேகர்பாபுவின் கருத்துக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்து உள்ளார். 

இதையும் படிங்க: அடுத்து தமிழ்நாட்டிலும் வெற்றி தான்... தமிழிசை சௌந்தரராஜன் சூளுரை...!

அம்மன் கையில் தாமரை இருப்பது போல அனைவர் உள்ளத்திலும் தாமரை இருப்பது வேண்டுமென்றால் அது ஒரு மகிழ்ச்சியை குறிப்பது ஆனால் அது அரசியலை குறிப்பது என்று அறநிலைத்துறை அமைச்சர் கூறுவது கண்டிக்கத்தக்கது என்று கூறினார். தாமரையைப் பார்த்து எவ்வளவு அரண்டு போய் இருக்கிறீர்கள் என்பது இதன் மூலம் தெரிகிறது என்றும் நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு அவர் எதுவும் சொல்லவில்லை எனவும் சூரியன் சுப்ரபாதம் என்ற பாடல் கூட பாடத்தான் படுகிறது., அதை யாரும் அரசியலாக எடுத்துக் கொள்ள வில்லை என்றும் தெரிவித்தார். அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுகவின் ஆன்மீக இந்து மத எதிர்ப்பை வன்மையாக கண்டிப்பாக தெரிவித்துள்ளார். என்னதான் எதிர்த்தாலும் அனைவர் மனதிலும் தாமரை மலரத்தான் போகிறது., அறநிலையத்துறையை திமுக அலுவலகமான அறிவாலயமாக மாற்ற வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நடுநடுங்க வைக்கும் கொடூரம்... பெண்கள் தலைக் காட்ட முடியல.. கொதித்தெழுந்த தமிழிசை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share