×
 
☰

சரிப்பட்டு வராது... "தங்கத்தை விட தரமான பால்தான் தேவை".. CM விஜய்க்கு தமிழிசை வலியுறுத்தல்..!!

தங்கத்தை விட தரமான பால்தான் தேவை என தமிழிசை வலியுறுத்தி உள்ளார்.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் இன்று முதலமைச்சர் விஜயால் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்படுகிறது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் நேரடியாக பங்கேற்று முதல் கட்டமாக சில குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்து திட்டத்தை துவக்கி வைக்கிறார்.

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழக அரசின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளார். முதலில் மக்களின் அடிப்படைத் தேவைகளை கவனியுங்கள் என்று முதலமைச்சருக்கு அவர் வலியுறுத்தினார். குழந்தைகளுக்கு இப்போது தேவைப்படுவது பால்தான். தங்க மோதிரங்களை வழங்கப் போகிறீர்கள் என்றாலும், தரமான பாலுக்கான தட்டுப்பாட்டை எப்போது சரிசெய்யப் போகிறீர்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

தங்கத்தை விட தரமான பால்தான் இன்றைய குழந்தைகளுக்கு அவசியம் என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.சென்னை மக்களின் தினசரி பால் தேவை 30 லட்சம் லிட்டர்கள். ஆனால் ஆவின் அளிக்கும் அளவு வெறும் 14.5 லட்சம் லிட்டர்கள்தான். ஆவின் பால் பூத்துகளுக்குச் செல்வதற்கு முன்பே விற்றுத் தீர்ந்துவிடுகிறது. இதனால் மக்கள் அதிக விலை கொடுத்து தனியார் பாலை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தேங்காய் தண்ணீரில் மருத்துவ அற்புதம்... பொள்ளாச்சி இளைஞரின் உலக சாதனை! நயினார் பாராட்டு..!!

இதுதான் இன்று தமிழக மக்களின் நிஜமான குரல் என்று தமிழிசை சவுந்தரராஜன் சுட்டிக்காட்டினார். தங்க மோதிரத்தை விட இன்றைய தேவை பால்தான் என்பதை குழந்தைகள் சொல்லாமலே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று அவர் மேலும் கூறினார். அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யாமல் பிற திட்டங்களில் கவனம் செலுத்துவது மக்களின் நலனுக்கு உகந்ததல்ல என்பதே அவரது கருத்தின் சாரம்.

 

இதையும் படிங்க: ஜெம் வீரமணி நிகழ்ச்சியில் தவெக அமைச்சர்கள் பங்கேற்பு: மூடி மறைக்கும் முயற்சியா?- நயினார் கேள்வி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share