×
 

TIME OVER... திமுகவுக்கு நேரம் நெருங்கிடுச்சு! எச்சரித்த தமிழிசை

திமுகவை வீழ்த்த முடியாது என்ற இறுமாப்பு வேண்டாம் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்தியா கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆகியவை இரு பெரும் கூட்டணிகளாக திகழ்கின்றன. இந்தியா கூட்டணியில் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதேபோல் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. NDA கூட்டணியை பொறுத்தவரை பிரதான கட்சியாக கூறப்படும் அதிமுகவில் பல பிளவுகள் ஏற்பட்டுள்ளன.

ஓ பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணியில் இருந்து விலகுவது பலவீனப்படுத்தும் செயலாக அமைகிறது. அதே நேரத்தில் இந்தியா கூட்டணி என்பது தற்போதைய சூழலில் பலமாக இருக்கிறது என்ற கருத்தும் பரவி வருகிறது.

அதனால் திமுகவை யாராலும் வீழ்த்த முடியாது என்றும் மீண்டும் திமுகவே ஆட்சி அமைக்கும் எனவும் கூறி வருகின்றனர். இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினால். அப்போது, திமுகவை வீழ்த்த முடியாது என்ற இறுமாப்பு வேண்டாம் என்றும் திமுக விழும் நாள் வந்துவிட்டதாகவும் தெரிவித்தார். மக்கள் விரோத ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: முகமூடியார் பழனிச்சாமி... வீரவசனம் பேசிட்டு அமித்ஷாவை பார்த்து இருக்காரு! நக்கலடித்த டிடிவி தினகரன்

ஒரு தமிழர் துணை ஜனாதிபதியாக வருவதை விரும்பாத விரோதி திமுக அரசு எனவும் குற்றம் சாட்டினார். என் டி ஏ கூட்டணிக்குள் சுதந்திரமாக கருத்துக்களை கூற முடியும் என்றும் ஆனால் திமுக கூட்டணிக்குள் கருத்து சுதந்திரம் இல்லை எனவும் விமர்சித்தார். செல்வப் பெருந்தகையோ அல்லது திருமாவளவனோ தாங்கள் நினைக்கும் கருத்துக்களை வெளியில் கூற முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார். 

இதையும் படிங்க: இப்ப வேணாம்... அரசியல் கேள்விகளை தவிர்க்கும் ஜெயக்குமார்! என்னவா இருக்கும்?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share