×
 

திமுக காரங்க கமுக்கமா மாநாட்டுல கலந்துப்பாங்க.. ஒரே போடாக போட்ட தமிழிசை..!

ரஜினிகாந்த் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அவர் ஆன்மீகவாதி தான் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் தமிழிசை சௌந்தரராஜனும் கலந்து கொள்ள உள்ளார். இந்த நிலையில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, முருக பக்தர்கள் மாநாட்டில் ரஜினிகாந்த் கலந்து கொண்டாலும் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அவர் ஒரு ஆன்மீகவாதி தான் என்று தெரிவித்தார்.

மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்கள் ஆன்மீகவாதிகள் அல்ல என்று பொருள் கிடையாது என்று தெரிவித்த அவர், திமுகவினரும் ரகசியமாக மாநாட்டில் நிச்சயம் கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்தார். 

இதையும் படிங்க: பவன் கல்யாண் வருவதை எதிர்க்கலாமா? மீரு எவரண்டி.. பதில் செப்பண்டி.. H.ராஜா தடாலடி..!

துரைமுருகன் முருக பக்தர் இல்லையா என்று கேள்வி எழுப்பிய அவர், எல்லா ஆன்மீகவாதிகளும் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். அவருக்கு திரைப்பட பெயர்களை வைத்து தான் கூறிய வாழ்த்தையும் அவர் பகிர்ந்தார். 

இதையும் படிங்க: அரண்டு போச்சு திமுக.. சும்மா ஏதாச்சு பேசாதீங்க! லெப்ட் ரைட் வாங்கிய நயினார்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share