“யார் உடன் ரகசிய உறவு?”... தவெக அமைச்சர் நிர்மல் குமாருக்கு செக் வைத்த தமிழிசை...!
வருங்காலத்தில் தமிழகத்தில் பாஜக ஒரு பலமான சக்தியாக உருவாக்க அத்தனை நிகழ்வுகளும் நடந்து கொண்டுள்ளது
பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் சென்னையில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பாரதிய ஜனதா கட்சி சார்பில் 67 மாவட்டங்களுக்கான 67 தலைவர்கள் சுற்றுப்பயணம் செய்கிறோம் மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகள் மண்டல் நிர்வாகிகள் அனைப்பிரிவு நிர்வாகிகள் அனைவரையும் சந்தித்து கலந்துரையாடல் செய்ய வந்துள்ளோம். கட்சிகளை பலப்படுத்தி மேலும் அவர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் தமிழக முதல்வர் சுற்றுப்பயணம் செய்ய ஏற்பாடு செய்து வருகிறோம்.
வருங்காலத்தில் தமிழகத்தில் பாஜக ஒரு பலமான சக்தியாக உருவாக்க அத்தனை நிகழ்வுகளும் நடந்து கொண்டுள்ளது. 67 மாவட்டங்களில் உள்ள அமைப்பு ரீதியாக உள்ள நிர்வாகிகள் சந்தித்து பாரத பிரதமர்களின் சாதனைகளை அந்தந்த மாவட்ட மக்களுக்கு எடுத்து செல்வது எங்கள் நோக்கம். 12 ஆண்டுகளில் பிரதமர் மோடி செய்த சாதனைகளை புத்தகமாக வெளியிட்டு அதை மக்களிடம் எடுத்துச் செல்வதை நோக்கம்.
சென்னையில் 61 சதவீத மக்களுக்கு மட்டும் டிரான்ஸ்போர்ட் வசதிகள் உள்ளது. மரியாதைக்குரிய பாரதப் பிரதமர் ஜூலையில் வடபழனி பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் திட்டத்தை துவக்கி வைக்க உள்ளார். தமிழகத்தை ஆண்டு கொண்டு இருக்க கட்சிகள் ஆண்ட கட்சிகள் போக்குவரத்து வசதிகளை கூட சரியாக செய்து கொடுக்காத நிலை உள்ளது. மாண்புமிகு பிரதமர் அவர்கள் சென்னையில் பெற்றோர்கள் திட்டத்தை துவக்க உள்ளார். மதுரைக்கு மெட்ரோ ரயில் வருமா என்றது கேள்வியாக இல்ல தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் மெட்ரோ ரயில் சேவை குறித்து சரியான திட்டங்களை சமர்ப்பிக்காததால் திட்டம் செயல்படுத்த முடியவில்லை.
இதையும் படிங்க: எதிர்பார்ப்போடு வந்த தவெக ஆட்சி எதிர்ப்போடு கிளம்பியிருக்கிறது..!! தமிழிசை விளாசல்..!!
மேகதாது அணை விவகாரத்தில் பாஜக நிலை என்ன என்பது குறித்த கேள்விக்கு, மேதாது அணை கட்டக்கூடாது என்பதுதான் பாஜகவின் நிலை தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர வேண்டும் எங்களின் நிலை. மாணிக்கம் தாகூவர் மற்றும் விஸ்வநாதர் போன்றோர் ஒரு செங்கல் கூட வைக்கம் விடமாட்டோம் எனக் கூறுகின்றனர். தமிழக அமைச்சரவையில் இருந்து கொண்டே கொள்கை ரீதியாக அங்கே உள்ள காங்கிரஸில் கட்டுப்படுத்த முடியவில்லை
தீபத்தூண் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையீடு கொடுத்த கேள்விக்கு, தீபத்தின் குறித்து மேலும் அறிய செய்து வரும் தவறான முன்னுதாரணம் இந்துக்களின் உணர்வு பிரச்சனைகளை இந்த அரசு பார்க்க வேண்டும் என்ற ஆட்சி மாதிரி இந்த ஆட்சியும் அதே தவறை செய்கிறது. உயர் நீதிமன்ற தீர்ப்பு உள்ளது தமிழக அரசு அதிகாரிகள் ஆய்வு செய்த காரணம் கூறியுள்ளனர்.
நிர்மல்குமார் முதலில் மின்வெட்டை சரி செய்ய வேண்டும் யார் கூட ரகசிய உறவு உள்ளது பகல் காணாமல் போகிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும் சிபிசிஐடிக்கு ஒரு வாரத்திற்கு முன்னால் விசாரணைக்கு ஏற்பாடு செய்தார்கள் யாருடன் அவராக ரகசிய உறவு வைத்துள்ளார் என்று மின்தொடையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை என்றார்.
இதையும் படிங்க: பிள்ளை புடிக்கிறவங்க மாதிரி எம்.எல்.ஏ.க்களை புடிச்சிட்டு இருக்காங்க... தவெகை போட்டு பொளந்தெடுத்த தமிழிசை...!