×
 

உங்க தாத்தா காவிய கலைஞரே காவிமயம் ஆனவரு தான்! நீ சின்ன புள்ளப்பா.. உதயநிதியை கலாய்த்த தமிழிசை..!

உங்கள் தாத்தா காவியக் கலைஞரே காவி கலைஞராக இருந்தவர் தான் என்று உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு தமிழிசை பதிலடி கொடுத்தார்.

திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக பாக முகவர்கள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து பேசினார். அப்போது பாஜக ஆட்சி என்பது பாசிச ஆட்சி, அதிமுக ஆட்சி என்பது அடிமை மாடல் ஆட்சி என கூறினார். அண்ணா பெயரில் கட்சியை வைத்துக்கொண்டு அமித்ஷாவிடம் அதிமுக அடகு வைக்கப்பட்டுவிட்டது என்றும் அதிமுக - பாஜக கூட்டணியில் ஒற்றுமை இல்லாத சூழல் உள்ளது என்றும் தேர்தல்களில் திமுக முந்துவதால் ஈபிஎஸ்-க்கு பதற்றம் வந்துவிட்டது எனவும் கூறினார்.

மேலும், முழுமையாக காவி சாயத்தோடு எடப்பாடி இருக்கிறார் என்றும் முழு சங்கியாக இபிஎஸ் மாறிவிட்டார் எனவும் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார். ஓடி, ஒளிந்து சென்று பாஜகவோடு கள்ளக் கூட்டணி வைத்தவர் ஈபிஎஸ் என்றும் அடிமைகளையும் பாசிஸ்ட்களையும் தமிழக மக்கள் வீழ்த்துவார்கள் எனவும் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மீது பல்வேறு விமர்சனங்களை அவர் முன் வைத்தார்.

இந்த நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார். பாஜக அதிமுக கூட்டணியை பார்த்து வதைப்பதைத்து போன தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சில வார்த்தைகளை உதிர்க்க ஆரம்பித்துள்ளதாக விமர்சித்தார். எடப்பாடி பழனிச்சாமி காவி சாமியாகிவிட்டார் என்று கூறியுள்ளதாகவும் உங்கள் தாத்தா காவிய கலைஞராக இருந்தவர் என்றும் அவரே காவி கலைஞராக மாறினார் என்பதை நீங்கள் சிறுவனாக இருந்ததால் மறந்திருப்பீர்கள் என்றும் தெரிவித்தார். 

காவி மாறன், காவி பாலு, காவி ராசா என மத்திய அமைச்சர்களாக காவிக்கு தாவியவர்களை மறந்து விட்டீர்களா அல்லது மறந்தது போல் நடிக்கிறீர்களா என்று கேட்டுள்ளார். அரசியலில் காவிகளாக இருக்கலாம் ஆனால் பாவிகளாக தான் இருக்கக் கூடாது என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழக அமைச்சர்களுக்கு இறுமாப்பு ஜாஸ்தி! இவங்களா தமிழை காப்பாத்துறாங்க? தமிழிசை சாடல்..!

இதையும் படிங்க: திமுக காரங்க கமுக்கமா மாநாட்டுல கலந்துப்பாங்க.. ஒரே போடாக போட்ட தமிழிசை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share