×
 

இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை நிறைவு..! கடைசி நாளில் தலை காட்டாத அதிமுக உறுப்பினர்கள்..!

இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2026-ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 20-ஆம் தேதி சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டமன்ற மண்டபத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களின் உரையுடன் தொடங்கியது. ஆனால், ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் எதிர்பார்க்கப்பட்ட மரபான ஆளுநர் உரைக்கு மாறாக, தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்ற காரணத்தைச் சுட்டிக்காட்டி ஆளுநர் உரையை வாசிக்காமலேயே அவையிலிருந்து வெளியேறினார். இது தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகத் தொடரும் ஆளுநர் - மாநில அரசு இடையேயான மோதலின் புதிய அத்தியாயமாக அமைந்தது.

ஆளுநர் வெளியேறிய பிறகு, சட்டப்பேரவை தொடர்ந்து நடைபெற்றது. ஆளுநர் உரை வாசிக்கப்பட்டதாகக் கருதி அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு தரப்பு இதை மாநில உரிமைக்கான வெற்றியாகக் கொண்டாடியது. கூட்டத்தொடரின் முதல் நாளே பரபரப்பான சூழலில் தொடங்கியதால், அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்தது. அடுத்த நாட்களில் கூட்டத்தொடர் வழக்கமான நிகழ்ச்சி நிரல்களுடன் தொடர்ந்தது.

ஜனவரி 21-ஆம் தேதி இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மறைந்த தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன், கவிஞர் ஈரோடு தமிழன்பன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பள்ளிக் கட்டண வசூலை முறைப்படுத்தும் திருத்தச் சட்டம், பிச்சை எடுப்பதைத் தடுக்கும் சட்டத் திருத்தங்கள் உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு விவாதிக்கப்பட்டன. கூட்டத்தொடரின் போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

இதையும் படிங்க: குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்..!! தமிழ்நாட்டில் இந்த 2 நாட்கள் டாஸ்மாக் மூடல்..!! தமிழக அரசு அதிரடி..!!

சபாநாயகர் மு. அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் இந்தக் கூட்டத்தொடர் ஜனவரி 24 வரை நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது. இன்று நிறைவு நாளானதால், முதலமைச்சரின் பதிலுரை, நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதம், மசோதாக்கள் மீதான இறுதி விவாதங்கள் மற்றும் நிறைவேற்றம் ஆகியவை நடைபெற்ற முடிந்தது. கடைசி நாள் கூட்டம் என்ற போதிலும் அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு வராமல் புறக்கணித்தனர். இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்துடன் நிறைவடைந்தது. கூட்டத்துடன் நிறைவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பரபரப்பான அரசியல் களம்..! சட்டப்பேரவை 3 ஆம் நாள் கூட்டம்..! கேள்வி நேரத்தில் அமைச்சர்கள் பதில்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share