×
 

அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்..! ராஜ்பவனிலிருந்து பறந்த அதிரடி உத்தரவு..!

சட்டத்துறை அமைச்சராக இருந்த ரகுபதி கனிமவளத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக அமைச்சரவையில் ஏழாவது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இரண்டு அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றியமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

அதில், முதலமைச்சரின் பரிந்துரை இயக்கப்படுவதாகவும், சட்டத்துறை அமைச்சராக இருந்த ரகுபதி கனிமவளத்துறை அமைச்சராக மாற்றி அமைக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உண்ட வீட்டுக்கே இரண்டகம்..! திமுகவின் கொத்தடிமை ரகுபதி.. விளாசிய இபிஎஸ்..!

இனி சட்டத்துறையை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூடுதலாக கவனிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் துரைமுருகனிடம் இருந்த கனிமவளத்துறை ரகுபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவையில் 7வது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் துரைமுருகன் மற்றும் ரகுபதி ஆகியோரின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்படுவதாக ஆளுநர் மாளிகை தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 4 வருஷத்துல சொல்ல ஒரு நல்ல திட்டம் இல்ல... இதெல்லாம் ஒரு ஆட்சியா? - ஸ்டாலினை பொளந்தெடுத்த எடப்பாடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share