×
 

மீண்டும் முகக்கவசம் கட்டாயமா?... வெளியானது முக்கிய தகவல் ...!

தமிழ்நாட்டை பொறுத்தவரை கொரோனா தொற்று எண்ணிக்கை குறைவாகவே உள்ளது என்றும் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை என்றும் பொது சுகாதார இயக்குனர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். 

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தென்னிந்தியாவில் குறிப்பாக கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இந்த தகவல் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டிருக்கிறது. மேலும் தமிழ்நாட்டில் அதிக அளவில் கொரோனா பரவல் ஏற்ப சமூக வலைதளங்களில் தகவல் பரவப்பட்டிருக்கிறது. இந்த வகை அந்த வகையில் கொரோனா வைரஸ் தொற்று பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் என்ற தகவலும் சமூக வலைதளங்களில் பரவியதை எடுத்து பொது சுகாதாரத்துறை இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறது. 

குறிப்பாக கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் மட்டுமே தான் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை கொரோனா தொற்றினுடைய எண்ணிக்கை குறைவாகவே இருப்பதாக பொது சுகாதாரத்ததுறை தெரிவித்திருக்கிறது. மேலும் முகக்கவசம் பொது இடங்களில் அணிவது அவசியம் என்ற தகவலும், சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதன் நிலையில் இதற்கு பொது சுகாதாரத்ததுறை இயக்குனர் செல்வ விநாயகம் மறுப்பு தெரிவித்திருக்கிறார். 

தமிழ்நாட்டை பொறுத்தவரை கொரோனா தொற்று எண்ணிக்கை குறைவாக இருக்கக்கூடிய நிலையில் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை எனவும் தெரிவித்திருக்கிறார். மேலும் வீரியம் இல்லாத கொரோனா என்பதால் நோய் பரவல் தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்து உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். உலக சுகாதாரத்ததுறையும் மத்திய அரசு எச்சரிக்கையுடன் இருங்கள் என்று கூறியதை தவிர மற்ற விவரங்கள் எதையும் தெரிவிக்கவில்லை. 

இதையும் படிங்க: திரும்பவும் முதல்ல இருந்தா..? ஆசிய நாடுகளில் மீண்டும் கொரோனா.. ஹாங்காங், சிங்கப்பூரில் புதிய அலை!

தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் தமிழ்நாடு சுகாதாரத்ததுறை சார்பில் பல்வேறு அறிவிப்புகள் கொடுக்கப்படும். அதற்கு முன்னதாகவே சமூக வலைதளங்களில் பரவக்கூடிய செய்திகள் தவறானவை எனவும் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை எனவும் பொது சுகாதாரத்ததுறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்திருக்கிறார். 

மேலும் பொது இடங்களில் முகக்கவசம் தமிழ்நாட்டில் இனி அவசியம் என்று பரவக்கூடிய செய்தி தவறானவை எனவும் சுகாதாரத்ததுறை மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை எந்த செய்தியும் உண்மைத்தன்மை இல்லை எனவும் பொது சுகாதாரத்ததுறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் மட்டுமேதான் இந்த தொற்று என்பது சற்று அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை கொரோனா தொற்று குறைந்த அளவிலே இருக்கிறது. எனவே சமூக வலைதளங்களில் பரவக்கூடிய செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை எனவும் பொது சுகாதாரத்ததுறை இயக்குனர் செல்விநாயகம் தெரிவித்திருக்கிறார். 

தமிழ்நாட்டை பொறுத்தவரை கொரோனா தொற்று எண்ணிக்கை குறைவாக இருக்கக்கூடிய நிலையில் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை எனவும் தெரிவித்திருக்கிறார். மேலும் வீரியம் இல்லாத கொரோனா என்பதால் நோய் பரவல் தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். உலக சுகாதாரத்ததுறையும் மத்திய அரசும் எச்சரிக்கையுடன் இருங்கள் என்று கூறியதை தவிர மற்ற எந்த தகவலும் இதுவரை கூறவில்லை. 
 

இதையும் படிங்க: உஷார் மக்களே..! புரட்டி எடுக்க போகும் மழை.. வலுவானது காற்றழுத்த தாழ்வு பகுதி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share