×
 

பவரை கையில் எடுத்த போலீஸ்... தலைகீழாக மாறிய தமிழகத்தின் களநிலவரம்... அடுத்தது என்ன?

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைந்த நிலையில், மாநகர எல்லை பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைந்த நிலையில், மாநகர எல்லை பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இன்று (ஏப்ரல் 21) மாலை முதல் தேர்தல் பரப்புரை ஓய்ந்தது. இதனைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி மாவட்ட மற்றும் மாநகர எல்லைகளில் போலீசாரின் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தை பொருத்தவரை,  அவிநாசியில் இருந்து திருப்பூர் மாநகருக்கு வரும் பிரதான சாலையில், அணைப்பது சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக வெளி மாவட்ட பதிவில் கொண்ட கார்களில் பண பட்டுவாடா நடைபெறாமல் இருக்க கார்களை நிறுத்தி தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தஞ்சையில் ஏப். 27 உள்ளூர் விடுமுறை! பெரிய கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு ஆட்சியர் அறிவிப்பு!

அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனைக்குப் பிறகு மாநகருக்குள் செல்ல அனுமதித்து வருகின்றனர். இதேபோல் பல்லடம் பகுதியில் இருந்து திருப்பூர் மாநகருக்குள் வரும் வழியில் வீரபாண்டி பகுதியிலும் தடுப்புகள் அமைத்து தீவிர வாகன சோதனைகள் துப்பாக்கி ஏந்திய போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் போலீசார் ஊர், ஊராக சென்று  வெளியூர் நபர்கள் யாரேனும் தங்கி உள்ளனர் என்ன காரணத்திற்காக தங்கி உள்ளனர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  அவ்வாறு தங்கி உள்ளவர்களை உடனடியாக வெளியேர உத்தரவிட்ட போலீசார் புதிதாக வெளியூரிலிருந்து வரும் நபர்களுக்கு அறைகள் கொடுக்கக் கூடாது எனவும் விடுதி உரிமையாளர்களுக்கு போலீசார்  அறிவுறுத்தினர். 
 

இதையும் படிங்க: ராமதாஸ் படத்தை பயன்படுத்த அன்புமணிக்கு தடை! சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share