மிரட்டலுக்கு அடிபணிய முடியாது... ஐகோர்ட்டில் அதிரடி காட்டிய தமிழ்நாடு அரசு...!
தேசிய கல்வி கொள்கையை ஏற்றால் தான் நிதி ஒதுக்குவோம் என மிரட்டி அடிபணிய வைக்க முடியாது என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ மாணவர்களுக்கு பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அதற்காக தமிழ்நாடு அரசு தரப்பில் குறைவான தொகை மட்டுமே வழங்குவதாக தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் சார்பில் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 2024-2025ஆம் ஆண்டு கல்வி கட்டணமாக நிர்ணயித்த கட்டணத்தையும் 2025-26ஆம் கல்வி ஆண்டில் மாற்றியமைக்கப்பட்ட உயர்த்தப்பட்ட கல்வி கட்டணத்தையும் செலுத்த அரசுக்கு உத்தரவிட்டுருந்தது.
இந்த நிலையில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய கட்டணத்தை வழங்கவில்லை என கூறி தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது பள்ளிகள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி. சங்கரன் நீதிமன்ற உத்தரவின்படி உரிய தொகை வழங்கப்படவில்லை என வாதிட்டார்.
அப்போது குறிப்பிட்ட கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் பின் 60% நிதியை மத்திய அரசு தர வேண்டும் என்றும் 40% தொகை மாநில அரசு வழங்க வேண்டும் என்ற நிலையில் தேசிய கல்வி கொள்கைக்கு ஒத்துக்கொண்டால் மட்டுமே நிதி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவிப்பதாக குறிப்பிட்டார். அப்போது குறிப்பிட்ட நீதிபதி தேசிய கல்வி கொள்கை ஏற்றுக்கொண்டால் கொடுப்பார்களே என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு.. சென்னை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு!
இதற்கு பதிலளித்த கூடுதல் தலைமை வழக்கறிஞர், மத்திய அரசினுடைய இந்த மிரட்டலுக்கு தமிழக அரசு அடிபணியாது என்றும், இதுகுறித்து உரிய அறிக்கையை தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து இந்த வழக்கினுடைய விசாரணையை நீதிபதி அக்டோபர் மாதம் 24ஆம் தேதிக்கு ஒத்திவிட்டார்.
இதையும் படிங்க: ஊட்டி, கொடைக்கானல் லிஸ்டில் இப்போ வால்பாறை.. சுற்றுலாப் பயணிகள் ஷாக்..!!