கச்சத்தீவுவை நோக்கி படையெடுக்கும் தமிழக மீனவர்கள்... கரையில் காத்திருக்கும் மிகப்பெரிய சவால்...!
இலங்கை கச்சத்தீவு திருவிழா திருப்பயணத்திற்கு படகு மூலம் சென்ற பக்தர்கள் ; கொடியசைத்து தொடங்கி வைத்த மாவட்ட வருவாய் அலுவலர்
இலங்கை இந்தியா இருநாட்டு நல்லுறவை மேம்படுத்தும் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இந்த ஆண்டு பிப்ரவரி 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவிற்கு இலங்கையிலிருந்து பக்தர்களும் இந்தியாவில் இருந்து பக்தர்களும் பங்கு கொள்ள உள்ளனர். இன்று ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு படகுகள் புறப்பட உள்ளது இந்நிலையில் 26 நாட்டுப் படகுகளும் 92 விசை படகுகளில் 3000துக்கும் மேற்பட்ட பயணிகள் கச்சத்தீவு திருவிழாவில் இந்தியாவிலிருந்து கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து வந்திருக்கக்கூடிய பக்தர்களை மத்திய மாநில உளவு பிரிவு போலீசார், சுங்கத்துரை அதிகாரிகள், கடலோர காவல் குழுமம் போலீசார் கியூ பிரிவு போலீசார் உள்ளிட்டோர் பக்தர்களை முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அனுமதித்து வந்தனர்.
இந்த நிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்லக்கூடிய பக்தர்கள் படகுகளை கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதனை அடுத்து ஒவ்வொரு படகுகாக கட்சதீவு திருவிழாவிற்கு பக்தர்கள் செல்ல உள்ளனர். இன்று ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு படகுகள் புறப்பட உள்ளது இந்நிலையில் 26 நாட்டுப் படகுகளும் 92 விசை படகுகளில் 3000திற்கும் மேற்பட்ட பயணிகள் கச்சத்தீவு திருவிழாவில் இந்தியாவிலிருந்து கலந்து கொள்ள உள்ளனர்.
இதையும் படிங்க: #BREAKING அதிரும் அரசியல் களம்... எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறார் ஓபிஎஸ்?... இன்றே திமுகவில் ஐக்கியம்...!!
இதனிடையே தமிழகத்தின் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து வந்திருக்கக்கூடிய பக்தர்களை மத்திய, மாநில உளவு பிரிவு போலீசார், சுங்கத்துரை அதிகாரிகள், கடலோர காவல் குழுமம் போலீசார் கியூ பிரிவு போலீசார் உள்ளிட்டோர் பக்தர்களை முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அனுமதித்து வருவது மட்டுமல்லாது கட்சதீவு திருவிழாவுக்கு செல்ல பக்தர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
இதையும் படிங்க: ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்...!! - மாயாவி பட நடிகை தந்தை கொலையில் அதிரடி திருப்பம்... விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்...!