ராமேஸ்வரம் கோவிலுக்கு உடனடியாக அர்ச்சகர் நியமிக்க வேண்டும்... உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
ஆகம கோவில்கள் மற்றும் ஆகமம் இல்லாத கோவில்களை மூன்று மாதத்திற்குள் அடையாளம் காண உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆகமக் கோயில்களில் அர்ச்சகர் நியமனம் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆகம விதிகளின்படி உருவாக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்படும் சைவ திருக்கோயில்களில் அதற்குரிய பிரிவைச் சேர்ந்தவர்கள் அல்லாதவர்களை அர்ச்சர்களாக நியமிப்பதற்கும், பயிற்சி அளிப்பதற்கும் எதிராக அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இதையும் படிங்க: யார் இந்த பிஆர்.கவாய்? குடிசையில் பிறந்து இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி..!
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஆகம விதிகளுக்கு உட்படாத கோவில்களில் அனைத்து சாதி அர்ச்சகர்களை நியமிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், ராமேஸ்வரம் கோவிலில் அர்ச்சகர், மணியம் உள்ளிட்டோரை நியமிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரம் கோவிலில் குருக்கள் இன்றி பூஜைகள் நடைபெறுவதாக முறையிட்டதால் உடனடியாக நியமிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 21 நீதிபதிகளின் சொத்துக்களை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.. ரூ.120 கோடி வைத்துள்ள நீதிபதி யார்?