×
 

“போலீசை அடிச்சியிருக்கக்கூடாது... என் மேலையும் தப்பிருக்கு...” - தஞ்சாவூர் இளைஞர் ஆகாஸ் உருக்கம்...!

தஞ்சையில்   சிறப்பு உதவி காவல் ஆய்வாளர்  அப்துல் ரஹீம்   அடித்ததால் ,    இளைஞர் ஆகாஸ் திருப்பி அடித்த சம்பவத்திற்கு பின் ஆகாஸ்  பேட்டி  -  இருவர் மீதும் உள்ள வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தல்

தஞ்சையில்  கடந்த  17 ம் தேதி  சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் அப்துல் ரஹீம் ஆகாஸ் எனும் இளைஞரை அடித்த நிலையில், இளைஞர் ஆகாஸ் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் அப்துல் ரஹீமை அடித்த சம்பவம்  வைரலானது. இதையடுத்து கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை  சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள ஆகாஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் காவலரை கை நீட்டி அடித்தது தவறு என ஒப்புக்கொண்டுள்ளார். 

தஞ்சையில்  பத்திரிக்கையாளர்களை சந்தித்து  பேசுகையில்,  அனைத்து  மீடியாவிற்கும் நன்றி.தனக்கு மூளை நரம்பியல் பிரச்னை இருப்பதால்  அடிக்கடி  பிட்ஸ் வந்துடும். விடுதலை சிறுத்தை கட்சிக்காரர்கள்  மாநகராட்சி முன் மறியலில் ஈடுபட்டதால் தான் பிரச்சனை ஏற்பட்டது. நாங்கள் அவசரமாக வேலைக்கு போகவேண்டும்  வேலைக்கு போனால்தான் எனக்கு சம்பளம் இந்த நிலையில் என்னை விடாததால் பிரச்சனை ஏற்பட்டது . கட்சிக்காரர்களால் தான் பிரச்னை.

போலீசார் எஸ்.எஸ்.ஐ  அப்தும் ரஹீம்  வயதில் மூத்தவர் ரொம்ப நல்லவர் . நான் அவரை பேசியதும்  தவறு   அடித்ததும் தவறு. எனது வழக்கறிஞர் வீட்டில் ஓய்வெடுத்து தூங்க சொன்னார்  அதனால் தற்போது ஒய்வில் இருக்கிறேன்.

இதையும் படிங்க: #BREAKING காலையிலேயே தெறித்த போலீஸ் தோட்டா... முந்திரிக்காட்டில் துப்பாக்கிச்சூடு... பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்...!

அந்த பிரச்னை நடந்த அன்று தான் எனக்கு பிறந்தநாள். அந்த போலீசார் எஸ்.எஸ்.ஐ  ஓய்வு பெறும் வயதில் உள்ளவர்  என்றும்   இருவர் மீதும் உள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றார். இந்த பிரச்னையால் தனியார் நிறுவனம்  வேலையை விட்டு நீக்கி விட்டார்கள் 
வேற வேலை வேண்டும் என்றார். 

காவலரை தாக்கியது ஏன்?

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனின் பிறந்தநாள் மற்றும் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற கட்சியின் மாநில மாநாட்டை முன்னிட்டு தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

மாநகராட்சியின் உரிய அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த இந்த பேனர்களை மாநகராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.வி.சி.க. நிர்வாகி லெனின் தலைமையில், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பேனர்கள் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து அனுமதியின்றி வைக்கப்பட்ட ப்ளக்ஸ்கள் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, மாநகராட்சி அலுவலகம் முன்பு விசிகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

அப்போது விளார் பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞர் அப்பகுதியைக் கடக்க முயன்றுள்ளார். அந்த சமயத்தில் விசிகவினருக்கும் இளைஞர் ஆகாஷுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே விசிக கட்சியினர் இளைஞரை சுற்றிக்கொண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விசிகவினர் இடையே பேசினர். தொடர்ந்து இளைஞர் ஆகாஷுடன் காவல்துறையினர் பேசி நிலைமையை சமாளிக்க சிறப்பு எஸ்.எஸ்.ஐ. அப்துல்ரஹீம் முயன்றார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த காவலர் எதிர்பாராத விதமாக ஆகாஷை அறைந்துள்ளார். இதனால் கோவத்தின் உச்சுக்கே சென்ற ஆகாஷ் பதிலுக்கு அவரை தாக்கினார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தாக்கியதாக கூறி இளைஞர் ஆகாஷ் மீது 6 பிரிவுகளின் கீழ் கைதுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது 

இதையும் படிங்க: பரந்தூர் நிலத்தில் பல்லாங்குழி ஆடும் தவெக அரசு! நயினார் நாகேந்திரன் கண்டனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share