×
 

விஜய் அண்ணா WELCOME..!! திருச்சி TO தஞ்சை பயணம்... பூமழை பொழிந்து தொண்டர்கள் உற்சாகம்..!!

திருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு புறப்பட்ட விஜய்க்கு வழிநெடிகலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

தஞ்சாவூரில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி மிகுந்த எதிர்பார்ப்புடன் நடைபெறுகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்தும் வகையில் தவெக தலைவர் விஜய் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்த முக்கிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே அய்யாசாமிபட்டி பிரிவு சாலை பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் நடைபெறுகிறது. காலை 11 மணி முதல் தொடங்கி நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தின் 8 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த சுமார் 4,900 நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

இவர்களுக்கு கியூஆர் கோடு கொண்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு, அதன் மூலம் மட்டுமே கூட்டத்தில் அனுமதி அளிக்கப்படுகிறது. தஞ்சாவூரில் நடைபெறும் கூட்டம் என்பதால் விவசாயிகள் பிரச்சனைகளை விஜய் எடுத்துரைப்பார் என்று அதிக அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: எனக்குன்னே வருவீங்களா டா?... விசிலடிச்சான் குஞ்சுகளால் விஜய்க்கு வந்த வினை... தவெகவை பொளந்தெடுத்த பத்திரிகையாளர் மன்றம்...!

இதனிடையே தஞ்சையில் நடைபெறும் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விஜய் சென்னையில் இருந்து தனி விமான மூலம் புறப்பட்டு சென்றார். திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கிய விஜய் அங்கிருந்து தஞ்சைக்கு சாலை மார்க்கமாக புறப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டிக்கு விஜய் கூறப்பட்ட நிலையில் அவருக்கு வழி நெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். விஜய் பிரச்சார வாகனத்திற்கு பூமழை பொழிந்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். 

இதையும் படிங்க: சொன்னா கேளுங்கம்மா..! தஞ்சையில் தவெக நிகழ்ச்சி...!! கைக்குழந்தையுடன் வந்த பெண்ணை திருப்பி அனுப்பிய போலீஸ்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share