#BREAKING தஞ்சையில் பேரதிர்ச்சி... நெல் கொள் முதல் நிலையத்தில் மூட்டைகள் சரிந்து விழுந்ததில் பெண் தொழிலாளி பலி...!
தமிழக அரசின் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் நெல் மூட்டைகள் சரிந்து, பெண் தொழிலாளி மீது விழுந்ததில் பெண் தொழிலாளி பலி
தஞ்சையை அடுத்துள்ள ஆர்சுத்திப்பட்டு திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் இரண்டு பெண் தொழிலாளிகளின் மீது நெல் மூட்டைகள் சரிந்து விழுந்ததில் சின்னப்பொண்ணு என்பவர் சம்பவ இடத்திலேயே பலி. படுகாயமடைந்த சகுந்தலா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி
தஞ்சாவூரில் இந்த ஆண்டு கோடை நெல் சாகுபடி அமோகமாக நடைபெற்றது. கோடை வெயிலின் தாக்கத்தைத் தாங்கும் திறன் மற்றும் பூச்சித் தாக்குதல் குறைவாக இருக்கக்கூடிய பயிர் ரகங்களை விவசாயிகள் அதிகம் பயிரிட்டனர். இதனால் மகசூல் அதிகமாக கிடைத்தது. அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில், 251 நெல் கொள்முதல் நிலையங்களில் மூலமாக விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
கடந்த ஆட்சியில் ரயில் மற்றும் லாரி மூலமாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அரவை பணிக்காக வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வந்தன. ஆனால்புதிதாக ஆட்சி அமைத்த தவெக கொள்முதல் செய்த நெல்மணிகளை அரைக்கும் பணிகளில் தாமதம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
தஞ்சையை அடுத்துள்ள ஆர்சுத்திப்பட்டு திறந்தவெளி நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளில் தேங்கியிருந்த நெல் மூட்டைகளை மழையில் நனைந்து சேதமடையாமல் பாதுகாக்க இரண்டு பெண் தொழிலாளிகள் பணியமர்ந்தப்பட்டுள்ளனர். தினக்கூலி ரீதியில் சின்னப்பொண்ணு, சகுந்தலா ஆகியோர் பணியாற்றி வந்துள்ளனர். இன்று வழக்கம் போல் அவர்கள் நெல் மூட்டைகள் மீது தார்பாய்களை போட்டு மூடும் பணியில் ஈடுபட்டிருந்த போது மூட்டைகள் சீட்டு கட்டு போல் சரிந்து இருவர் மீதும் விழுந்தது.
இதில் 53 வயதான சின்னப்பொண்ணு என்ற பெண்மணி சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி உயிரிழந்தார். மற்றொருவரான சகுந்தலா படுகாயங்களுடன் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் அலட்சியத்தால் பெண் பலியாகிவிட்டார் தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், கொள்முதல் செய்த நெல்மூட்டைகளை உடனுக்குடன் அரவைக்கு அனுப்பவேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
இதையும் படிங்க: டி.ஆர்.பாலு வழக்கில் எந்த சமரசமும் கிடையாது!! இதுவரைக்கும் என்ன பேசினேனோ! அதை தொடர்ந்து பேசுவேன்!!
இதையும் படிங்க: TNSTC-க்கு புதிதாக 2,000 மின்சார ஏசி பஸ்கள்.. விரைவில் டெண்டர்..!!