×
 

டேங்கர் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு...! அவசர பொதுக்குழு கூட்டத்தில் முடிவு...!

இன்று முதல் டேங்கர் லாரிகள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவின் ஆற்றல் துறையில் முக்கிய பங்காற்றும் ஒரு அமைப்பாக, சதர்ன் ரீஜன் பல்க் எல்பிஜி டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள் சங்கம் அறியப்படுகிறது. 1988ஆம் ஆண்டு 120 உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, இன்று 1,200க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

இதன் முதன்மை இலக்கு, தென்னிந்தியாவில் எல்பிஜி பல்க் டிரான்ஸ்போர்ட் தொழிலில் ஈடுபட்டிருக்கும் டேங்கர் லாரி உரிமையாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் உள்ளது. சங்கத்தின் உறுப்பினர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் போன்ற பொது மூலதன எண்ணெய் நிறுவனங்களின் ரிஃபைனரிகளிலிருந்து எல்பிஜி டிரான்ஸ்போர்ட் செய்யும் 5,500க்கும் மேற்பட்ட புல்லட் டேங்கர்களை உரிமையாகக் கொண்டுள்ளனர்.

இந்த டேங்கர்கள், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களையும் ஒரு யூனியன் டெரிடரி யையும் உள்ளடக்கிய தென்னிந்திய பிராந்தியத்தில் உள்ள 49 பாட்டிலிங் பிளாண்ட்களுக்கு எல்பிஜியை விநியோகிக்கின்றன. இந்த நிலையில், இன்று முதல் எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில் நடைபெற்ற சதர்ன் ரீஜன் பல்க் எல்பிஜி டிரான்ஸ்போர்ட் ஓனர்ஸ் அசோசியேஷன் அவசர பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் AIMTC சேர்மன் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தார்.

இதையும் படிங்க: கறார் காட்டிய போலீஸ்... இபிஎஸ்-ன் நாளைய பிரச்சாரம் ரத்து...! ஏன் தெரியுமா?

எண்ணெய் நிறுவனங்களின் புதிய டெண்டரில் பல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் புதிய டெண்டரில் அனைத்து டேங்கர் லாரிகளுக்கும் வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். 

இதையும் படிங்க: கரூர் சம்பவம் எதிரொலி… இபிஎஸ் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு! முக்கிய காரணம் தெரியுமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share