குளியலறையில் ரகசிய கேமரா : டாடா எலக்ட்ரானிக்ஸ் விடுதிக்கு "டாடா" காட்டும் பெண் தொழிலாளர்கள்...!
பெண் தொழிலாளர்கள் சிலர் தங்களுடைய வீட்டிற்கு புறப்பட்டும் சென்றனர். மேலும் புதன் கிழமை காலை முதல் சிப்ட் பணிக்கு யாரும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
ஓசூர் அருகே பெண் தொழிலாளிகள் தங்கி இருக்கும் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா அமைத்த வட மாநில இளம் பெண் தொழிலாளி கைது: வீடியோ பகிரப்பட்ட ஆண் நண்பரை பிடிக்க போலிசார் தீவிரம்.
ஓசூரில் டாட்டா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை பெண் தொழிலாளர்கள் தங்கி இருக்கும் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா வைத்ததாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் போராட்ட நடத்திய நிலையில் ரகசிய கேமரா வைத்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நீலு குமாரி (23)என்ற இளம் பெண் தொழிலாளியை உத்தனபள்ளி போலீசார் கைது செய்தனர். அவர் தனது ஆண் நண்பருக்கு ரகசிய கேமராவில் எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்த நிலையில் அது சமூக வலைத்தளத்தில் பரவி வந்துள்ளது, அதன் அடிப்படையில் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து உத்தனப்போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தியதில் ஆண் நண்பர் சந்தோஷ் குமார் என்பவர் பெங்களூரில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் ஆண் நண்பரை கைது செய்ய புறப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
இதையும் படிங்க: குளியலறையில் ரகசிய கேமரா... நள்ளிரவில் நடுரோட்டில் குவிந்த 2000 பெண்களால் பரபரப்பு...!
இந்த நிலையில் பெண் தொழிலாளர்கள் சிலர் தங்களுடைய வீட்டிற்கு புறப்பட்டும் சென்றனர். மேலும் புதன் கிழமை காலை முதல் சிப்ட் பணிக்கு யாரும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
பதற்ற காரணமாக விடுதி முன்பாக கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி தங்கதுரை தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
குளியல் அறையில் ரகசிய கேமராக்கள் அதிகளவில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தனி கவனம் செலுத்தி தீவிர விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெண் தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் கேமரா வைத்த வடமாநில பெண் தொழிலாளியான நீலு குமாரியை கைது செய்து விசாரணைக்கு பின் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர் இச்சம்பவம் ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இதையும் படிங்க: பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025: முதல்கட்டமாக 121 தொகுதிகளில்.. வாக்குப்பதிவு விறுவிறு..!!