×
 

அரசு சலுகைகளை எதிர்பாரா தன்னலமற்ற சேவைக்கு சொந்தக்காரர்! தலைமை காஜி மறைவுக்கு விஜய் இரங்கல்..!.

தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது சாகிப் மறைவுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் சாகிப் காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவுக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது இரங்கல் செய்தியில், தமிழ்நாடு அரசு தலைமை காஜி அல்லாமா முஃப்தி Dr.முஹம்மது ஸலாஹுத்தீன் அய்யூபி காதிரி அஜ்ஹரி காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்ததாக கூறியுள்ளார்.

தனது தலைமை காஜி பொறுப்பில் நேர்மையோடு அறத்தின் வழியில் பணியாற்றியவர் என்றும் அரசு வழங்கிய சைரன் வைத்த கார், அரசு ஒதுக்கிய வீடு, அரசு வழங்கிய தலைமை அலுவலகம் எனத் தனது பொறுப்புக்காக அரசு வழங்கிய சலுகைகளைப் பெறாமல் சேவையாற்றியவர் எனவும் புகழாரம் சூட்டினார்.

இதையும் படிங்க: தவெகவில் இணையும் அருண் ராஜ்.. புஸ்ஸி ஆனந்துக்கு நெருக்கடி.. அதிர்ச்சியில் தொண்டர்கள்..!

அனைவரின் நன்மதிப்பைப் பெற்ற தலைமை காஜி அல்லாமா முஃப்தி Dr.முஹம்மது ஸலாஹுத்தீன் அய்யூபி காதிரி அஜ்ஹரி அவர்களைப் பிரிந்து வாடும் அவர்தம் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்வதாக விஜய் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தோல்வி காணாத நாயகர்.. போருக்கு முன்பே வாகை சூடுபவர்.. முத்தரையருக்கு தவெக தலைவர் விஜய் புகழாரம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share