"தாய்மாமன் தங்க மோதிரம்"..! குழந்தை பிறந்தவுடன் மறக்காமல் செய்யுங்கள்... முழு விவரம்..!!
தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தின் வழிமுறைகள், செயல்பாடுகள் உள்ளிட்ட முழு விவரத்தை பார்க்கலாம்.
முதலமைச்சர். விஜய் அறிவித்த தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் பதிவு செய்ய தேவையான தகுதிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம். தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். அரசு மருத்துவமனை, அரசு சுகாதார மையங்களில் பிரசவிக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். குழந்தையை பெற்ற தாய் கட்டாயம் கர்ப்ப அடையாள அட்டை, RCH ஐடி உடன் வைத்திருக்க வேண்டும். புதிதாக பிறந்த குழந்தைகளின் தாய்மார்கள் மட்டுமே தகுதி உடையவர்கள். புதிதாக பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் மோதிரம் வழங்கப்படும்.
உயர் வரிசை பிரசவம் (HOB) 2 அல்லது அதற்கு மேற்பட்ட பிரசவம் செய்த தாய்மார்களுக்கும் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி இத்திட்டம் பொருந்தும். எவ்வித பாலின பாகுபாடு இன்றி ஆண் பெண் என அனைத்து குழந்தைகளுக்கும் இந்த திட்டம் பொருந்தும்.
மேலும் இந்த திட்டத்தில் பதிவு செய்ய குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை, இருப்பிட சான்றிதழ், தொழிலாளர் நல வாரியம் சார்பில் வழங்கப்பட்ட அடையாள அட்டை, அஞ்சல் துறை சார்பில் முகவரிக்கான அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் தேவை. குழந்தை பிறந்தவுடன் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பிறகு தாய்மார்களின் அதிகாரப்பூர்வ அடையாளச் சான்றுகளில் ஏதேனும் ஒன்றுடன் சரிபார்க்கப்படும்.
இதையும் படிங்க: "வாயா என் தங்கமே"..! கட்டியணைத்து கண்ணீர் சிந்திய ராமதாஸ்... நல்லதே நடக்கும்.. நம்பிக்கை தெரிவித்த அன்புமணி..!!
இரட்டை முக அங்கீகார அமைப்பு (FRS) மற்றும் கருவிழி ஸ்கேன் மூலம் நிகழ்நேர நகல் நீக்கம் செயல்படுத்தப்படும். தாயை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பும்போது போது பிரசவ பதிவுகள், ஆதார்/PICME உடன் இணைக்கப்பட்ட தாயின் தனிப்பட்ட RCH ஐடி மூலம் தகுதி சரிபார்க்கப்படும். மோதிரம் வழங்கப்பட்ட பின் உடனடியாக டிஜிட்டல் ரசீது பதிவு மற்றும் பயோமெட்ரிக் ஒப்புகை ஆகியவை நேரடியாக PICME போர்ட்டலில் பதிவு செய்யப்படும்.
இதையும் படிங்க: சத்தீஸ்கரில் அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் அடுத்தடுத்து விஷம் வைத்துக்கொலை..!! சைக்கோ கில்லரின் விபரீத ஆசை..!!