விஜய் செய்தது தவறு.. நின்னு போராடி இருக்கணும்... அதிமுக எம்.பி.யின் SUDDEN ரியாக்ஷன்...!
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் செய்தது தவறு என அதிமுக எம்பி தம்பிதுரை கூறியுள்ளார்.
தமிழகத்தின் அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் தான் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உற்சாகத்துடன் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வந்தார். கரூரில் சுற்றுப்பயணம் செய்த விஜய் உற்சாகத்துடன் வரவேற்க காத்திருந்தனர். தொண்டர்களின் இந்த உற்சாகம் சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை. இந்த பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழந்தனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவம் நடந்த பிறகு விஜய் கரூரில் இருந்து சென்னைக்கு திரும்பினார். பாதிக்கப்பட்ட மக்களை அவர் நேரில் சென்று சந்திக்கவில்லை என்றும் வெறும் அறிக்கைகளை மட்டுமே விடுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்றைய தினம் தனது மௌனத்தை விஜய் கலைத்தார். விஜயின் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது.
வேண்டுமென்றால் தன்னை பழிவாங்குங்கள் என்றும் தனது தொண்டர்களையோ அல்லது நிர்வாகிகளையோ பழிவாங்க வேண்டாம் எனவும் விஜய் கூறியிருந்தார். விஜய் எதற்காக வீட்டிலேயே முடங்கி இருக்கிறார் என்ற கேள்விகளும் முன்வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: கரூர் சம்பவத்தில் பாதுகாப்பு குறைபாடா? ஆதாரத்துடன் அமுதா IAS கொடுத்த விளக்கம்..!
இந்த நிலையில், விஜய் செய்தது தவறு என்றும் அவர் நின்று போராடி இருக்க வேண்டும் எனவும் அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்தார். அவர் நீதிமன்றத்தை நாடி சிறப்பு குழு அமைக்க வேண்டும் என்று கேட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்தார். திமுக என்ற தீய சக்தியை எதிர்க்கும் வலு எடப்பாடி பழனிச்சாமிடம் மட்டும்தான் இருப்பதாக கூறினார்.
இதே போல் தான் எடப்பாடி பழனிச்சாமியின் சுற்றுப்பயணத்திற்கும் திட்டமிடப்பட்டிருக்கும் என்றும் ஆனால் அவர் அரசியலில் கையில் தேர்ந்தவர் மற்றும் அவரால் அதனை சமாளிக்க முடிகிறது எனவும் தெரிவித்தார். அதனால் தான் நிர்வாகம் செய்வதற்கு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆக வரவேண்டும் என்று கூறுவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING: என்னை பழிவாங்குங்கள்… ஆனா…! கரூர் சம்பவம் குறித்து வாய் திறந்த விஜய்…!