தொழில் உரிமம் வழங்கும் விதியில் திருத்தம்.. ஒரே நாளில் உரிமம்.. எந்தெந்த கடைகளுக்கு பொருந்தும்?!!
ஒரே நாளில் தொழில் உரிமம் வழங்கும் வகையில் விதிகளை திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் விதிகள் 2023 விதி 289(1) ன்படி நகர்புற உள்ளாட்சிக்கு அமைப்புகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தொழில்புரிவோர் கட்டாயம் தொழில் உரிமம் பெற வேண்டும் என்ற நிலை இருந்து வருகிறது. விதி 290ன்படி புதியதாக எடுக்கப்படும் மற்றும் புதுப்பிக்கப்படும் தொழில் உரிமங்கள் மூன்று ஆண்டுகள் வரை செல்லும்.
அதன்படி, வணிகர்கள் தங்களது உரிமத்தை இணையதளம் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம். இந்த நிலையில் சிறு வணிகர்களுக்கு எளிதாக தொழில் உரிமம் கிடைக்கும் வகையில் விதிகளை திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய மாற்றம் மூலம் ஒரே நாளில் தொழில் உரிமம் பெற முடியும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அரசு அதை அங்கீகரிக்கக் கூடாது... இதுதான் எங்கள் நிலைப்பாடு... திட்டவட்டமாக கூறிய திருமாவளவன்!!
அதன்படி, 500 சதுடி அடிக்கு குறைவாக உள்ள கடைகளுக்கு சுய சான்று அடிப்படையில் இணையதளம் மூலம் ஒரே நாளில் தொழில் உரிமம் வழங்கப்படும். மேலும் உணவு பொருட்கள் சார்ந்த கடைகள் தவிர்த்து அனைத்து கடைகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின் மூலம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள சிறு வணிகர்கள் மிகவும் பயன்பெறுவார்கள் என கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி நகர்புறங்களில் 500 சதுடி அடிக்கு குறைவாக உள்ள கடைகளுக்கு சுயசான்று அடிப்படையில் ஒரே நாளில் தொழில் உரிமம் வழங்கும் வகையில் விதிகளை திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருப்பது வணிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது..
இதையும் படிங்க: மீண்டும் புழக்கத்திற்கு வந்த மயோனைஸ்... அதிரடி ஆக்ஷனில் இறங்கிய உணவு பாதுகாப்புத்துறை!!