×
 
☰

#BREAKING நள்ளிரவு தேனியில் நடந்த பயங்கரம்... விடிந்ததுமே கொத்து, கொத்தாய் கைதாகும் கைதிகள்... சிக்கியது எப்படி?

தேனி தேக்கம்பட்டி கிளைச் சிறையிலிருந்து தப்பிய 17 கைதிகளில் நான்கு பேர் பிடிபட்டுள்ளனர்.

தமிழக வரலாற்றில் ஒரே நேரத்தில் 17 சிறைக் கைதிகள் தப்பிய சம்பவம், தேனி மாவட்ட காவல்துறை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக காவல்துறையினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

17 கைதிகளையும் பிடிப்பதற்காக 17 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தப்பியோடிய ஒவ்வொரு கைதியும் தங்களது குடும்பத்தினர் அல்லது உறவினர்களை நோக்கிச் சென்றார்களா என்பது குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுவரை நான்கு பேர் பிடிபட்டுள்ளனர். நேற்று நள்ளிரவில் மதுரையைச் சேர்ந்த பிரவீண் குமார் என்ற கைதி பிடிபட்டார். இதையடுத்து, இன்று அதிகாலையில் மேலும் மூன்று பேரை காவல்துறையினர் பிடித்துள்ளனர்.

இதையும் படிங்க: #BREAKING நாளை முதல் அதிரடி மாற்றம்... ஆவின் பால் பொருட்கள் விலை தடாலடி உயர்வு...!

அதன்படி, மதுரையைச் சேர்ந்த ராஜா சிக்கந்தர், ராஜ்குமார் மற்றும் தேனியைச் சேர்ந்த சிலம்பரசன் ஆகிய மூன்று பேரும் பிடிபட்டுள்ளனர். இதுவரை மொத்தம் நான்கு கைதிகள் பிடிபட்டுள்ள நிலையில், தப்பியோடிய எஞ்சிய 13 கைதிகளையும் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டத்துக்கு அருகிலுள்ள கேரளாவுக்குச் செல்லும் பாதைகள் மற்றும் மாவட்ட எல்லைகள் அனைத்தும் உஷார்படுத்தப்பட்டு, தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், தப்பியோடிய கைதிகளின் புகைப்படங்கள் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தேனி மட்டுமின்றி மதுரை, சிவகங்கை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையினருக்கும் கைதிகளின் புகைப்படங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

தப்பியோடிய கைதிகள் இந்த நான்கு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், அந்தந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட காவல் நிலையங்கள் வாயிலாகவும் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தப்பியோடிய எஞ்சிய 13 கைதிகளையும் பிடிப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தேனி சிறையில் பேரதிர்ச்சி... காவலர்களை தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோட்டம்... நடந்தது என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share