×
 

தேனியில் துணிகரச் சம்பவம்.. நிலத்தகராறில் நிகழ்ந்த இரட்டைக்கொலை..!

தேனியில் ஏற்பட்ட நிலத்தகராறில் இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே இரண்டு பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாக போலீசாரக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பிரேதங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் கொலை செய்யப்பட்டது முத்துமாயன் மற்றும் சுந்தர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

நிலத்தகராறு ஏற்பட்டதன் காரணமாக இரண்டு பேரையும் ராணுவ வீரரின் குடும்பத்தினர் வெட்டிக்கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக ராணுவ வீரரின் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: தலையை சிதைத்து நர்ஸ் கொடூர கொலை.. சிசிடிவியால் சிக்கிய கணவன்..!

தொடர்ந்து சடலங்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். நிலத்தகராறு காரணமாக நிகழ்ந்த இந்த இரட்டை கொலை சம்பவம் உத்தமபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நெல்லையில் பயங்கரம்.. சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share